பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 矿mJ°

கிண்கிணி வாய்ச் செய்த தாமரைப்பூ போல்-கிண்கிணி என்னும் காலணியில் பொறித்த தாமரைப்பூ வடிவுபோல.

செங்கண்-சிவந்த உம் கண்ணின் பார்வை

சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ-சிறிது சிறிதாக எங்கள் மேல் படக் கூடாதோ

திங்களும் ஆதித்தனும் எழுந்தாற் போல-சந்திரனும் சூரியனும் ஒருசேர எழுந்ததைப் போல்

அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நொக்குதி யேல்-உன் அழகிய கண்கள் இரண்டும் கொண்டு எங்களைப் பார்த்து அருள் செய்தால்

எங்கள் மேல் சாபம் இழிந்து-எங்களிடம் சேர்ந்துள்ள பாவச்சுமைகள் நீங்கிவிடும்.

தொகுப்புரை

உலகத்து மா மன்னர்கள் தங்கள் ஆணவம் சிதைந்து உன் பள்ளிக் கட்டிலில் வந்து உன் தரிசனத்துக்காகக் காத்துக் கொண்டு இருப்பதுபோல யாமும் வந்து கூடியுள்ளோம்.

உம் அழகிய கண் பார்வை எம்மேல் சிறிது சிறிதாகப் படக் கூடாதா? திங்களும் சூரியனும் ஒரு சேர எழுந்ததைப் போல் உன் அழகிய கண்கள் இரண்டும் கொண்டு எங்கள் மேல் செலுத்தி அருள் செய்தால் எங்கள்மேல் சேர்ந்துவிட்ட பாவச் சுமைகள் நீங்கிவிடும். விளக்கவுரை

அங்கண் மாஞாலம் -அழகிய இடத்தை உடைய பெரிய உலகம்.

அங்கண் இரண்டு-கண்கள் இரண்டும்; அங்கண்-இருவேறு பொருளில் வருவது காண்க; கிங்கிணி-கிண்கிணி எதுகை நோக்கித் திரிந்தது. அபிமான பங்கம்-தான் என்னும் செருக்குச் சிதைந்து என்பதாம் .