பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பாவை 81

செய்து புறப்பட்டு வெளியே வருவதைப் போல என்பது.

2 - 6ΥΙ 6ύ) 10.

காயம்பூ நிறத்துக்கண்ணா! நீ உன் அரண்மனையில் இருந்து வெளிவந்து இங்கேவந்து அருளி வேலைப்பாடு உடைய அழகிய சிங்காசனத்தின்மீது அமர்ந்து எம் காரியம் ஆராய்ந்து அருள் செய்வாயாக’’ என்பது செய்தி.

மன்னிக்கிடந்து-வெளியே மழை பெய்வதால் உள்ளே பொருந்தி நிலைத்து உறங்க வேண்டி ஏற்படுகிறது: அதனால் மன்னி என்று கூறினார்.

சீரிய சிங்கம் என்பதால் மிடுக்கு உடைய ஆண் சிங்கம் எனப் பொருள் கொள்க; சீர்-சிறப்பு.

வேரி மயிர்-வியர்வையோடு கூடிய மயிர் மூரி-சோம்பல் முறித்து; மூர்க்கத்தனமாகச் சோம்பல் முறித்து, மூரி என்பது மூர்க்கம் என்ற பகுதியில் இருந்து அமைந்த வினைச்சொல் என்க.

காரியம்-செய்து தர வேண்டிய செய்தி; செயற்பாடு. பூவைப்பூ வண்ணன் என்பது பாமாலை

24 அன்றிவ் வுலகம் (புகழ் மாலை)

அன்றிவ்வுலகம் அளந்தாய்! அடிபோற்றி; சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்!

திறல்போற்றி: பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி, கன்று குணவிலா எறிந்தாய்! கழல்போற்றி; குன்றுகுடையாய் எடுத்தாய்! குணம் போற்றி: வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி: என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான் இன்றுயாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்.