பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பாவை 83

திறல் போற்றுகிறோம். உன் புகழ் போற்றுகிறோம். உன் கை வேலைப் போற்றுகிறோம். எக்காலத்திலும் உன் வெற்றிகளைப் புகழ்ந்து பறை கொள்ள விரும்புகிறோம். அதற்காக இன்று யாம் வந்திருக்கிறோம். இரக்கம் காட்டி அருள்க.

விளக்கவுரை

கண்ணனின் பல புகழ்களைப் போற்றிப் பாடும் சிறப்பு இதில் உள்ளது. உன்னைப் புகழ்ந்து பாடி நீ தரும் பரிசில் பெற விரும்புகிறோம். அதற்காகத்தான் இங்கு வந்திருக்கிறோம்’ ’ என்று கூறப்படுவது இப்பாட்டின் கருத்தாகும்.

ஒவ்வொரு நிகழ்ச்சியை எடுத்துக்கூறி அதனால் வெளிப் படுகின்ற கண்ணனின் புகழ் தனித்தனியே கூறப்படுவது ஈண்டுக் குறிப்பிடத் தக்கதாகும்.

இப்பாடல் முழுவதும் கண்ணனின் புகழையே பேசுகிறது; பாமாலை என்பதற்கு இது முழு எடுத்துக் காட்டாக உள்ளது.

நாராணன் விளையாட்டுகள் பல இதில் கூறப் பட்டுள்ளமை காண்க.

1) திரிவிக்கிரம அவதாரம்;

2) இராம அவதாரம்;

3) கண்ணன் அவதாரம்.

இம்மூன்று அவதாரங்களின் நிகழ்ச்சிகள் ஈண்டுக் கூறப் பட்டுள்ளன.

கண்ணன் அவதாரத்தில் மூன்று நிகழ்ச்சிகள் கூறப்படு கின்றன.

1. சகடம் உதைத்தது;

2. கன்றை விளவின் மீது எறிந்தது;

3. குன்றைக் குடையாக எடுத்தது.