பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பாவை 87

போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே சாலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே கோலவிளக்கே! கொடியே! விதானமே! ஆலினிலையாய்! அருளேலோ ரெம்பாவாய்.

பதவுரை

மாலே! மணிவண்ணா-விளிகள்; மார்கழி நீராடுவான்-மார்கழி மாதம் நீராடுவதற்கு, மேலையார் செய்வனகள்-மேன்மை பொருந்திய அடியவர்கள் செய்யும் செயல்களை ஒட்டி

வேண்டுவன கேட்டியேல்-எமக்ரு என்ன தேவை என்று கேட்பாயானால்

பால் அன்ன வண்ணத்து உன்பாஞ்ச சன்னியமே-பால் நிறத்தை உடைய உன் பாஞ்ச சன்னியம் என்ற

வெண்சங்கு

போல்வன சங்கங்கள்-போன்ற பல சங்குகளும், போய்ப்பாடு உடையனவே-சென்று எங்கும் ஒலிக்கும் பெருமை உடையனவாகிய

சாலப் பெரும் பறை யே--மிக்க பெரிய பறைகளும், பல்லாண்டு இசைப் பாரே-பல்லாண்டு பாடக் கூடிய

இசை வல்லவர்களும்,

கோல விளக்கே-அழகிய திருவிளக்குகளும், கொடியே-கொடிகளும், விதானமே-வெய்யில் தடுக்கும் மேல் கூரைச் சிலை

களும்; ஆலின் இலையாய்-பிரளய காலத்தில் ஆலிலையின்மீது

துயில் கொள்பவனே? அருள்-தந்து அருள்வாயாக.