பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

பாட்டுக்குப் பொருள் விளங்காததால் அது அந்நியமாகி' விடுகிறது. அதற்குத் தக்க வகையிள் பொருள் கூறி விளக்கு வது தேவைப்படுகிறது. அப்பணியினை இந்நூல் செய் துள்ளது.

பாவைப் பாட்டு கிராமியப் பின்னணி கொண்டு விளங்கு கிறது. ஆயர்தம் கூட்டு வாழ்க்கை சித்திரிக்கப்படுகிறது. மழை வேண்டும்; நாடு வாழ வேண்டும் என்று பாடுவதால் இவை நாட்டுணர்வுப் பாடல்களும் ஆகின்றன.

துயிலும் மகளிரை எழுப்பி இறைவன்பால் உய்த்து வழிபடச் செய்வர்; மாயையில் உழலும் மாந்தரைத்தட்டி எழுப்பி ஞான நெறிக்கண் உய்த்து இறைவன் திருவடி களை வணங்கச் செய்யும் கருத்தும் இதில் உள்ளது. எனவே தத்துவப் பொருள் மிடைந்த ஞான நூலும் இது ஆகிறது.

யாப்பு அமைதியோடு பாடல் ஒன்றுக்கு எட்டு வரிகள் இடம்பெற்றுள்ளன. சங்கத் தமிழ்' என்று பாராட்டப் படுகிறது. செந்தமிழ் நடையில் இது எழுதப்பட்டுள்ளது. சுவை மிக்க பாக்கள் இவை; உரைகள் இவற்றிற்கு, விளக்கம் தருகின்றன.

ரா. சினிவாசன்