பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பாவை 89

பாடகமே யென்றனைய பல்கலனும் யாமணிவோம்

ஆடையுடுப்போம்; அதன்பின்னே பாற்சோறு

மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்

கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.

பதவுரை .

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா-பகைவரை வெல்

லும் சிறப்பு உடைய கோவிந்தா!

உன்தன்னைப் பாடிப் பறைகொண்டு யாம் சன்மானம்-உன்னைப்

பெறும் பாடிப் பறையை ஏற்றுக்கொண்டு அதற்கு மேலும் யாம் பெறும் பரிசுப் பொருள்கள்

நாடு புகழும் பரிசினால்-நாட்டு மாந்தர் புகழும் வகை யினால்

நன்றாக-மிகுதியாக.

சூடகமே, தோள்வளையே, தோடே, செவிப்பூவே, பாடகமே என்று அனைய பல்கலனும்-இங்குக் கூறப்படும் பல அணிகலன்களையும்

யாம் அணிவோம்-யாம் அணிந்து கொள்வோம்;

ஆடை உடுப்போம் - புதிய ஆடைகளை உடுத்திக்

கொள்வோம்;

அதன்பின்னே பால் சோறு-அதன் பிறகு பால் சோறு (அதனை)

மூட நெய் பெய்து-அச்சோற்றினை மூடும் அளவுக்கு நெய் பெய்து,

முழங்கை வழிவார-முழங்கைவழி வடிய. கூடியிருந்து குளிர்ந்து-யாம் கூட்டமாக இருந்து உண்டு மகிழ்ச்சி அடைவோம்.

தி-7