பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 frré?

உன் தன்னைப் பிறவிப் பெறுந்தனை புண்ணியம் யாம் உடையோம்-நீ எங்களில் ஒருவனாகப் பிறக்கும் புண்ணியத்தைப் பெற்றுள்ளோம்.

குறைவு ஒன்றும் இல்லாத கோவிந்தா-குறைவு எதுவும் இல்லாத எம் தலைவனே! -

உன் தன்னோடு உறவு (ஏல்) நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது-உன்னோடு எமக்கு உள்ள உறவினை இங்கு யார் ஒழிக்க நினைத்தாலும் அது தீராது.

அறியாத பிள்ளைகளோம் - உலக நடை மிகுதியும் அறியாத பெண் பிள்ளைகள் யாம்;

அன்பினால் உன் தன்னைச் சிறுபேர் அழைத்தனவும்உன் மீது உள்ள பேரன்பினால் உன்னைப் பெயரிட்டு அழைத்திருந்தாலும்.

சீறி அருளாதே-கோபிக்காது பொறுத்தருள்க. இறைவா!-தலைவனே! நீ தாராய் பறை-நீ எமக்கு வேண்டிய பறை வாத்தியம் தருக.

தொகுப்புரை

பசுக்களைக் காட்டுக்கு மேய ஒட்டச் சேய்து அங்கே உணவு உண்ணும் எளிய வாழ்க்கையினர் யாம்;

கல்வியறிவு மிக்கு இல்லாத எளிய வாழ்க்கையுடைய ஆயர் குலத்தில் நீ பிறந்து எமக்குப் பெருமை தேடித் தந்திருக்கிறாய்; எந்தக் குறையும் இல்லாத எம் தலைவனே! உனக்கும் எங்களுக்கும் உள்ள உறவினைப் பிறர் ஒழிக்க நினைத்தாலும் அது நீங்காது; ஒழியாது.

அறியாத பெண் பிள்ளைகள் யாம்; உன் பெருமை அறியாது உரிமையால் சிது பேர் இட்டு உன்னை அழைத்