பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 . ராசி

பொற்றாமரை-பொன்+தாமeர; பெற்றம்-பசு வட்ட வழக்குச் சொல்: இற்றை-இன்று என்பது வேற்றுமைத் தொடரில் இற்றை எனத் திரிந்தது; வல்லெழுத்துப் பெற்றது.

கொள்வான்-கொள்ள வினை எச்சம். எற்றைக்கும்-இற்றை நோக்கி எற்றை என அமைந்தது இதுவும் வேற்றுமைத் தொடரில் வல்லெழுத்துப்

பெற்றது. ஏழுஏழு என்பது தொடர்ந்து வரும் பிறவிகளைக்

குறிக்கின்றது எண் குறிக்க வந்தது அன்று. மற்றை-ஏனைய; நம்-எம் என்ற பொருளில்

வந்துள்ளது. என்றும் உறவு தொடர்வதாக என்று வேண்டுகின்றார்.

அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு' என்ற பெரியாழ்வார் பாசுரத்தோடு ஒப்பிட்டுக் காண்க்.

30. வங்கக் கடல் கடைந்த (இது பாமாலை எனல்) வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத் திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி அங்கு அப்பறை கொண்ட வாற்றை அணிபுதுவைப் பைங்கமலத் தண் தெரியல் பட்டர் பிரான் கோதை சொன்ன சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே இங்கு இப் பரிசுரைப்பார் ஈரிரண்டு

மால்வரைத்தோள்