பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை



தவனமொடும் அலகைநட மிடவீ ரபுத்திரர்கள்

அதிரநின மொடுகுருதி குடிகா ளிகொக்கரிசெய் தசைஉணவு தனில்மகிழ விடுபேய் நித்திரைகள்

. பலகோடி

திமிதமிட நரிகொடிகள் கழுகு ஆடரத்தவெறி

வயிரவர்கள் சுழலஒரு தனிஆ யுதத்தைவிடு திமிரம்தின கரஅமரர் பதிவாழ்வு பெற்றுலவு

முருகோனே!

திருமரும் புயன்அயனொடு அயிரா வதற்க்குரிசில்

அடிபரவு பழநிமலை கதிர்கா மமுற்றுவளர்

சிவசமய அறுமுகவ திருவே ரகத்திலுறை

பெருமாளே!

சூரபதுமன் முதலிய அசுரர்களின் சேனையானது, போர்த்தொழிலோடு போர்க்களத்தில் எதிர்த்துப் போர் செய்ய வந்தபோது ஒரு நிமைப்பொழுதில் அவர்கள் படை அவர்களின் சைனியங்கள் அழிந்தொழிய வேலாயுதத்தை எடுத்து. நிலத்தில், அசுரர்களின் தலைகள் உருண்டு விழவும். போர்களத்தில் பொடி படுத்தி அழிக்கும் யுத்தத்தில் தாகத்தோடு, பேய்கள் கூத்தாடவும், வழி வழி வந்த வீரர்கள் நடுங்க, கொக்களிக்கின்ற கொழுப்புடனே இரத்தத்தைக் குடிக்கின்ற காளிகள், மாமிசமாகிய ஆகாரத்தில் களிப்பு அடைய, விடுகின்ற பேயின் கூட்டங்கள் பல கோடிகள் கூத்தாட நரிகளும் காகங்களும் கழுகுகளும் ஊனைத் தின்ற களிப்பினால் ஆட இரத்தவெறியைக் கொண்டுள்ள வயிரவர்கள் சுற்றிச் சுற்றிவர, ஒரு இணை சொல்லற் கில்லாத படையைப் பிரயோகித்த, ஆன்ம கோடிகளின் அஞ்ஞானமாகிய இருட்டை அகற்றும் சூரியனே தேவலோகத்தவர்க்கு அரசனாகிய இந்திரன், வாழ்வு பெற்று உய்யுமாறு உலாவிய முருகக் கடவுளே இலட்சுமி