பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை



தொழிலிலேயே திரிகின்ற, பயனற்றவனாகிய என்னை, உன் திருவடிகளைத் துதிக்கும் படி நின் அருளைச் செய்வாயாக

குமர குருபர என்றும் இளமைக் கோலத்தை உடைய வனே பரனுக்கும் குருவாக விளங்கினவனே என்பது பொருள். நிருதர் கலகா - தேவர்களுக்கு இன்பஞ் செய்யும் பொருட்டுத் தருமந் தவறிய அசுரர்களுக்குத் துன்பத்தை உண்டாக்கியவனே! என்பது பொருளாம். பிறைச்சடையர் குரு என நல்லுரை உதவும் - 'அறிவு மிக்கவர்களைத் தலைமேல் கொண்டு தாங்கும் தூய அறிவுடைய தனி முதற் கடவுளாகிய இறைவருந் தனக்குக் குரு என்று புகழும் மயில் வாகனத்தவனே என்பது பொருள். "தான்் மாமதியுடையவன் என்பதை உயிர்கள் உணர்ந்து தன்னை யடைந்து உய்வெய்த வேண்டும் என்னுங் கருணையாலும் மதியைச் சடையிற் சூடினர்" என்பாரும் உண்டு. இதனை

து திச் சபைசைச் குடுதன் தரதே?

என்னும் பட்டினத்தடிகள் வாக்கானும் அறியலாம்.

விலை மாதர்கள் தம்மை அழகு செய்வது காளையர்கள் மயங்கித் தம் வயமாகவே, இதனாலன்றோ,

னே? பதுக்குதன் ைேசயனின் ஆகு” என்றார் ஒளவையாரும். குலமகளிர்க்குக் கூச்சம் வேண்டும்; விலை மகளிர்க்குக் கூச்சங் கூடாது. முலைமே லிருந்த கலை சோரக் காளையர் கண்டு கருத்தழிந்து காமமீளவே தெருவில் நிற்பர் என்பதனைக் காட்ட முலையிலுறு துகில் சரிய நடுவீதி நிற்பவர்கள் என்றார். இதனாலன்றோ,

'க.சி திணைகிண்ணக் குலக்கொடிகர் க.கி./ ைேசயுங் கெட்டு விதிர்”

என்றனர் பெரியார்.