பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

哆 :

த. கோவேந்தன், டி. லிட் 109

சிறந்த மலையிலும், பழநித் தலத்தின்கணுள்ள இணை சொல்லுதற்கரிய சிறப்பு வாய்ந்த மலையிலும், திருத்தணிகை மலையின் மேலும், திருப்பரங்குன்றத்திலும் அலைகள் சுற்றிச் சூழ்ந்திருக்கும்படியான திருச்செந்தூர் என்னும் தலத்திலும், பாதுகாவலைக் கொண்டுள்ள மதில்கள் பல சூழ்ந்த மலைகளின் மேலும், நல்ல பதினான்கு உலகங்களிலும் மேவியமைந்து வாழ்கின்ற அடியார்கள், எண்ணியவைகள் எல்லாவற்றையும் அதிகமாகத் தந்தருளும் குமரக் கடவுளே திருவேரகமலை என்ற எல்லாராலுஞ் சிறப்பித்துக் கூறப்பெறும் ஆச்சரிய மிகுக்கும் சுவாமி மலை என்னும் திருத்தலத்தையும். விரும்பிய, திரு உள்ளம் உடையவனே இராசத லட்சணங்களைக் கொண்டுள்ள சிறந்த உமாதேவியார் பெற்றளித்த பெருமானே இளமை வாய்ந்த கன்றை நிகர்த்த முலைகளை உடையவரும், மாரனை நிகர்த்த அழகையுடைய காளையர்களின் மனத்தை உருக்குகிறவர்களும், கோவைக்கனியை நிகர்த்த இதழைத் தினமுந் தினமும் விற்பவர்களும், குயிலும், நல்ல புறாவும், கோழியும். காட்டின் கண்ணுள்ள பட்சிகளும் ஆகிய இவற்றின் பலவகையாகிய ஒலிகளை, கற்றவர்களும், அழகிய கண்களின் கடை நோக்கினாலே மயக்குகின்றவர்களும் பெரிய தந்திரச் செயல்களால் நறுமணங் கமழும் புகைகள் ஊட்டப்பெற்ற புட்பங்கள் விரித்த படுக்கையாகிய மெத்தையில் படுப்பவரும், ள்த்தகையவர்களையும் ஏமாற்றித் தங்கள் வீட்டிற்கு அழைப்பவர்களும், காவினிடத்தே வாழும் அழகு வாய்ந்த கிள்ளையை நிகர்த்த சொல்லை உடையவர்களும், ஒழுங்காகக் கட்டப்பெறாத ஆடையைத் தளர்த்தி, இடுப்பைச் சுற்றி கட்டிக் கொள்பவரும், கைப்பொருளைப் பிடுங்கிக் கொள்ளத் திரும்பத் திரும்ப அணைந்து கொள்பவர்களும், வஞ்சக வித்தையைக் கற்றுப் பழகி, அதற்கு ஏற்ப நடிக்கின்றவர்களும் ஆகிய வேசையர்களின் கூட்டுறவு ஏற்றதாகுமோ, ஆகாது.