பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை



மட்:ரே மனதுசெ தினதருண மருண்ணவ/ே7

உனமருவு தணAரகே' வரைாஜ துக்கிருகன் மண ஆதித்தாசை, வனங்காத க2/ெதுமையே! என்ற தாயுமானவர் வாக்கு ஈங்கு ஒப்பிட்டுக் காணத்தக்கது.

ஒண்ணா எனற்பாலது ஒணா எனவும், ஒண்ணாதது, எனற்பாலது. ஒணாதது எனவும் வந்தன தொகுத்தல் விகாரம். கலாபம் - ஈண்டுத் தோகையை உடைய மயிலுக்காய சினை ஆகுபெயர். அம்புராசி - கடல் இது வடமொழி, திரிசிரன் என்னும் அரக்கனது மலையாதலின், திரிசிராமலை என்றாயது.

நாயக என்னும் சொல்.ஒரே பொருளிற் பன்முறை வந்தது சொற்பொருட் பிரிதினிலையணி, வள்ளியம்மை இச்சா சத்தியராதலினாலும், உலகுத் தொழில் நடத்தற்கு வள்ளி யம்மையாரை மணந்தன ராதலினாலும், வள்ளியம்மையார் மானிடச் சிறுமியாய் வேடர் குலத்தில் வளர்ந்தமையாலும், எங்கண் மானின் மகிழு நாயக என்றார். வடிவ தாமலை யாவையு மேவிய என்றது மலை வடிவங் கொண்ட எல்லா இடத்தும் என்பது பொருள் குறிஞ்சிக்.கடவுள் ஆதலின், இதனை,

"சேயேன் மேய மைவரை உலகமும்" என்ற தொல்காப்பியத்தான்ும் அறியலாம். இதனானன்றோ,

"குன்றுதோ றாடலி நின்றதன் பண்பே' - என்றார் திருமுருகாற்றுப் படையினும்,

எவர்க்கும் நாயக தகாததாய மாதர் மயக்கிற் செல்லும் மாதர் முயக்கிற் கிடக்கும் என்னை ஆட்கொண்டு சமாதி மனோலயம் என்னும் நின்னையே மனத்துப் பாவனை பண்ணி அடையும் பேரின்பப் பெருக்கை அடியேன் பெறும்படி அருள் புரிக என்பது வேண்டியதாம்.

本本本