பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன், டி. லிட் 受 39

சிவபெருமானது. ஒரு பக்கத்திலே பொருந்தி வளர்க்கின்ற, தேவியார் பெற்ற அருளைச் செய்கின்ற புத்திரனாகிய குருபரனே மரணமில்லாதவர்களாகிய தேவ லோகத்தவர், தொழ அருளச் செய்கின்ற தலைவனே! சுற்றத்தார், ஓலமிட்டு அழவும், ஊரிலுள்ளவர்களுடைய ஆசையானது நீங்கவும், பறை சல்லரி தம்பட்டங்களினுடைய பேரொலி வானமட்டுங் கேட்க, உலகத்திலுள்ள பல பேர்கள் அரிசியை வாயிலே சொரிகின்ற அந்த நாளிலே தேவரீரது முகங்களாகிய கிருபையோடு கூடிய செந்தாமரையை ஒத்த முகங்கள், ஒப்பற்றதாகிய ஆறும். பன்னிரண்டு கைகளுடனும், திரண்ட தோள்களுடனும், அழகிய குண்டலத்தைப் பூண்ட நீண்ட திருச்செவிகளுடனும், நீண்ட கண்களுடனும், இரண்டு திருவடிகளிலும், ஒளி செய்கின்ற சிறப்புப் பொருந்திய பாதச் சிலம்புகளுடனும், அழகிய மார்புடனும் வேதங்கள் முழங்க, தேவர்களின் கற்பகத் தருவினின்று தேன் ஒழுகுகின்ற மலர்மழையைப் பொழிய, உதர பந்தனமாகிய ஒளியைக் கொண்ட மணிமாலை மேல், முப்புரி நூலாகிய பூண் நூல் ஒளிமின்ன மயிலின்மேல், அழகு விளங்குகின்றவராய் முன்னே, அரிய சிவனடியார்கள் வந்து சேர. யமனுடைய படைகள், யமனுலகத்துக்கு ஒடும்படி சண்டையிட்டு வெற்றிச் சங்கம் பலவற்றை முறை முறையாக ஊதி, வாதாடி சிறுவனும் குதலைச் சொல்லை உடையவனும் தாழ்ந்தவனாகிய என்னை இந்த விதமாக, ஆட்கொள்ளுதற்கு வரமாட்டாயோ?

உறவின்முறை கதறியழ சுற்றத்தார் கதறி அழவும் என்பது பொருள்.

"மேல் விழுந் துற்றார் அழுமுன்னே" என்றார் பட்டினத்தடிகளும்,

F3