பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை



அருள்மிகுந்த செந்தூரிலும் பழநியில் உள்ள சிவகிரியிலும், எழுந்தருளியிருக்கும் கந்தப் பெருமானே!

நிலம் பெண்ணாகவும் கடல் அவளுக்கு ஆடையாகவுங் கூறுவது மரபு. கடலாடைப் புவிமகள்" என்றது காண்க. எட்டுத் திக்குகளையும் சூழ்ந்துள்ள ஏழு கடல் என்பர். புடவிக்கினி . கடலெட்டையும் என்றார். எண் கண்ணன் - பிரமனுக்கு நான்கு தலையுண்டாதலின் எட்டுக் கண் ஆயின.

திரிபுரத்தார் புரமூன்றையும் சிவபெருமான் சிரித்து எரித்தார் என்பது கதை,

நன்றாக தான்் க்கு தான்்பதை துட்செருண உன்ன்ை திருத்தங் கந்துரைத்தான்் கானே, மன்றாவின் துருத்தக் கறுரைத்தா ன4னும் கொன்தன்ன்ை ஆரமூன்றுங் கூட்டோ சமுரே' என்ற திருச்சாழலாலும் அறியலாம்.

குலம் - கூட்டம். சிவபெருமானைக் காணவந்த நாரதர் ஒரு மாதுளங்கனியைத் தந்தார். பக்கத்து இருந்த விநாயகரும் முருகரும் "எனக்கு எனக்கு எனக் கையை நீட்டினர். "அனைத்து லகங்களையும் சுற்றி முன்னால் வருவோனுக்குத் தருவேன்" என்றார். முருகர் மயிலின் மீதேறி உலகு முதலிய அண்டங்களை வலம் வரப் புறப்பட்டார். விநாயகரோ தாயையும் தந்தையையும். வலம் வந்து வணங்கி நின்றார். அனைத்து லகங்களும் தேவரீரும் தாயும் ஆதலின் உங்களை வலம் வந்தது அனைத்துக் கண்டங்களையும் வலம் வந்ததாகும்." என்று கூறி கனியைப் பெற்றார்.முருகர் அனைத்துலகங்களையும் வலம் வந்து பார்க்கக் கனி அண்ணன் கையிலிருக்கச் சினங்கொண்டு பழநி மலையில் ஆண்டியாக அடைந்தார் என்பது புராணம்.