பக்கம்:திருப்புமுனை.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9



கண்ணாயிரத்துக்குக் கைகொடுக்கும் முறையில் அவன் நண்பன் தங்கதுரையும் வந்து பேச்சில் கலந்து கொண்டான். கேலியும் கிண்டலும் கலந்த முறையில் நமுட்டுச் சிரிப்பு சிரித்தபடி,

“ஒருவேளை இதுக்கும் ஏதாவது பரிசு தருவாங்க’ன்னு ஓடிப்போய் உதவியிருப்பான்!” என்று கூறிச் சிரித்தான் தங்கதுரை.

“சோழியன் குடுமி சும்மாவா ஆடும்?” என்று கூறிவிட்டு கண்ணாயிரமும் அவனுடன் சேர்ந்து சிரித்தான்.

இவர்களின் ஏளனச் சிறிப்பைக் கண்ட அருளுக்கு இருவர் மீதும் வெறுப்பும் எரிச்சலும் ஏற்படவே செய்தது.

"ஏன்'டா, இப்படி எப்பப் பார்த்தாலும் இனியன்மேலே பொறாமைப்படறீங்க. நம்ம கிட்ட இல்லாத எத்தனையோ நல்ல குணங்கள் அவன்கிட்ட இருக்கு. வேண்டிய அளவுக்குத் திறமையும் இருக்கு. அதனாலே அவனை எல்லாரும் பாராட்டறாங்க; பரிசு தந்து புகழ்றாங்க!!

இதைக் கேட்கப் பிடிக்காதவனாகத் தங்கதுறை எதிர்ப்புக் குரல் கொடுத்தான்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருப்புமுனை.pdf/11&oldid=489705" இலிருந்து மீள்விக்கப்பட்டது