பக்கம்:திருப்புமுனை.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10


“என்னடா, பெரிய திறமை? நம்மகிட்ட மட்டும் இல்லைய?”

தங்கதுரையின் பேச்சில் ஆணவம் தெரிந்தது.

“பள்ளிக்கூடத்தின் எல்லாப் பரிசுகளையும் இனியனே வாங்குறதுக்குக் காரணம் திறமையும் இல்லே, மண்ணாங்கட்டியும் இல்லே. அதுக்கு ஒரு பெரிய ரகசியமே இருக்குடா!”

தங்கதுரையின் பேச்சை இடைமறித்து மர்மமாகப் புதிர் போட்டான் கண்ணாயிரம்.

பரிசு பெறும் மர்மத்தை அறிந்து கொள்ளத் துடித்தான் தங்கதுரை. பொறுமை இழந்தவனாக “அதென்ன அவ்வளவு பெரிய ரகசியம்?” என வினா தொடுத்து விடைக்காக கண்ணாயிரத்தின் முகத்தை நோக்கிக் காத்திருந்தான்.

“சொல்லுடா, நாமும் அதன்படி நடந்து பரிசும் பாராட்டும் வாங்கலாம்.” துரிதப்படுத்தினான் மணி.

மர்மத்தை நீடித்துத் தன் நண்பர்களைக் காக்க வைக்க விருமடாத கண்ணாயிரம் புதிரை அவிழ்க்கத் தொடங்கினான்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருப்புமுனை.pdf/12&oldid=489707" இலிருந்து மீள்விக்கப்பட்டது