பக்கம்:திருப்புமுனை.pdf/20

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18


தின் நினைவிலிருந்து முற்றிலும் விடுபடாதவனாக, ஏதேதோ சிந்தனையோடு நடந்தான் இனியன்.


3

பள்ளிக்கூடம் முடிவடைந்ததைக் குறிக்கும் வகையில் மணி அடித்து ஓய்ந்தது. அவிழ்க்கப் பட்ட மூட்டைக்குள்ளிருந்து நெல்லிக்காய்கள் சிதறி ஒடுவதைப்போல் வகுப்பறைகளிலிருந்து மாணவர்கள் ஒட்டமும் நடையுமாக உற்சாகத் தோடு வெளியேறினார்கள். சிறிது நேரத்தில் ஆராவாரம் அடங்கி அமைதி குடிகொள்ளத் தொடங்கியது.

வகுப்பறையிலிருந்து வெளிவந்த கண்ணாயிரம் தன் நண்பர்களை எதிர்நோக்கியவனாக வழக்கமான மரத்தடி வேரின் மீது சென்று அமர்ந்தான். ஒருவர்பின் ஒருவராகத் தங்க துரையும் மணியும் அங்கு வந்து சேர்ந்தார்கள். வகுப்பில் ஆசிரியர் நடத்தும் பாடத்தில் கவனம் செல்கிறதோ இல்லையோ இந்த மரத்தடியில் கூடி ஊர் வம்பளப்பதில் கவனம் செலுத்தத் தவறுவதே இல்லை. கண்ணாயிரத்தின் நண்பர் குழாம் வகுப்புக்கு வராமல் போனாலும் இந்த மரத்தடி மாநாட்டில் கலந்துகொள்ளத் தவறுவதே இல்லை. பாடத்தைத் தவிர்த்து மற்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருப்புமுனை.pdf/20&oldid=489769" இலிருந்து மீள்விக்கப்பட்டது