பக்கம்:திருப்புமுனை.pdf/32

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30


மேலும் மர்மத்தை நீடிக்காமல் புதிரை விடுவிக்க முனைந்தான் கண்ணன்.

“தனக்குச் சாப்பிடத் தந்த சாப்பாட்டை யாருக்கும் தெரியாமல் ஒரு பொட்டலமாகக் கட்டி கையிலே எடுத்துக்கிட்டு போனான்’டா,” ஒரு வழியாகக் கண்ணன் சொல்லி முடித்தான்.

இதைக் கேட்டபோது கண்ணாயிரமும் தங்கதுரையும் முகத்தைச் சுழித்தார்கள் இனியனைப்பற்றி ஏளனமாக அவர்கள் உள்ளம் நினைப்பதை முகக்குறிப்பு வெளிக்காட்டத் தவறவில்லை.

இவர்கள் மூவரும் இனியனைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பதை செவி மடுத்தவாறே அருள் கேட்டுககொண்டே அங்கே வந்து சேர்ந் தான். இனியனின் இணைபிரியாத் தோழன் ஆதலால் அவனைப்பற்றி ஏளனமாக எள்ளி நகையாடிப் பேசுவதை அவனால் பொறுக்க முடியவில்லை. இருப்பினும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமலே வந்ததும் வராததுமாகப் பேசினான்:

“நீங்க நெனைக்கிற மாதிரி தன் வீட்டுக்கு அவன் அதை எடுத்துச் செல்லவில்லை. நானும் சந்தேகப்பட்டு அவன் பின்னாலேயே போ னேன். அவன் அதை நோயோடு பட்டினி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருப்புமுனை.pdf/32&oldid=489781" இலிருந்து மீள்விக்கப்பட்டது