பக்கம்:திருப்புமுனை.pdf/42

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40


தங்கதுரையின் யோசனை கண்ணாயிரத்துக்கு மிகவும் பிடித்தது. வெறுங்கையால் முழம் போட முடியுமா?

“அந்தத் தலைப்புள்ள கட்டுரை எந்தப் புத்தகத்திலே இருக்குங்றதை எப்படிடா கண்டு பிடிக்கிறது?”

கண்ணாயிரத்தின் சந்தேகத்தைப் போக்கி உதவ முன்வந்தான் தங்கதுரை.

“இதுக்காக அதிகம் கஷ்டப்பட வேண்டியதில்லை. நூலகத்திலே இருக்கிற புத்தகம் எல்லாத்தையும் ஒரு புரட்டு புரட்டினா எதிலே இருக்கு’ன்னு தெரிஞ்சிட்டுப் போவுது.”

தொடர்ந்து தன் யோசனைக்குச் செயல் வடிவம் தந்து சொல்லி முடித்தான் தங்கதுரை.

யோசனை நல்லதாக இருந்தாலும், செயல் படுத்த முடியாததாகத் தோன்றியது மணிக்கு. அதை அவன் சுட்டிக்காட்டிப் பேசினான்:

“இருக்கிற அஞ்சாறு பாட புத்தகங்களை ஒரு முறை புரட்டறதுக்கே ஒரு வருஷம் போதலே. இன்னொரு வருஷமும் அதே வகுப்பிலே இருந்து புறட்டும்படியா இருக்கு. நூலகத்திலே இருக்கிற எல்லாப் புத்தகங்களையும் புரட்டனும'னா இன்னும் ரெண்டு மூணு ஜென்மம் நமக்குத் தேவைப்படும்’டா.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருப்புமுனை.pdf/42&oldid=489792" இலிருந்து மீள்விக்கப்பட்டது