பக்கம்:திருப்புமுனை.pdf/45

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

43

படியாவது துப்பறிஞ்சு கண்டுபிடிக்கணும். இல்லையா?

சமாதானப்படுத்தும் வகையில் நடுநிலைமையோடு பேசினான் தங்கதுரை.

“இப்ப அவன் எங்கேடா இருப்பான்?” கண்ணன் எழுப்பிய வினா மணிக்கு சிரிப்பை வரவழைத்தது.

“நிச்சயமா நம்ம மாதிரி எங்காவது மரத்தடியிலே உட்கார்ந்து சதித் திட்டம் போட்டுக்கிட்டிருக்க மாட்டான்.”

அவன் கேலி பேசியது கண்ணாயிரத்துக்குப் பிடிக்கவில்லை.

“சும்மா இருடா. இனியன் இப்ப எங்கே இருப்பான்னா...” கண்ணாயிரம் முடிக்குமுன் தங்கதுரை கூறினான்.

“கழுதை கெட்டா குட்டிச் சுவரும்பாங்க. இனியன் வீட்டிலே இருப்பான். இல்லேன்'னா நூலகத்திலே இருப்பான். அங்கேயும் இல் லேன்னா யாராவது ஒரு ஆசிரியர் வீட்டிலே சந்தேகமோ பாடமோ கேட்கப் போயிருப்பான்.”

“அவன் எங்கே இருந்தாலும் சரி. என்ன படிச்சு எப்படி எழுதறான்’னு நான் துப்பறிஞ்சு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருப்புமுனை.pdf/45&oldid=489795" இலிருந்து மீள்விக்கப்பட்டது