பக்கம்:திருப்புமுனை.pdf/49

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

47


“அதை ஏன்'டா கேக்கிறே தங்கதுரை, கண்ணன், கண்ணாயிரம் இவங்கள்'லாம் போட்டிக்குப் பேர் கொடுத்தாங்க. அவங்க வற் புறுத்தினாங்கன்’னு நானும் பேர் கொடுத்திட்டேன். இப்ப என்ன செய்யறதுன்னே தெரியலே. எனக்குக் கொஞ்சம் உதவுடா இனியன்!”

கெஞ்சும் பாவனையில் இனியனை நோக்கி வேண்டுகோள் விடுத்தான் மணி.

மணியின் அன்பு வேண்டுகோள் இனியன் மனதை நெகிழச் செய்தது. அவனுக்கு உதவ இனியன் உள்ளம் துடித்தது, 'என்னோடு என் வீட்டுக்கு வாடா கட்டுரை சம்பந்தமா ஏதாவது புத்தகம் தாறேன், உனக்குப் பயன்படும்,” எனக் கூறி அன்போடு அழைப்பு விடுத்தான்.

“கரும்பு தின்னக் கூலியா? . இப்பவே வர்றேன்'டா, வா போகலாம்.” எனக் கூறி வாய்ப்பை நழுவவிடாது இனியன் வீட்டை நோக்கி அவனோடு நடையைக் கட்டினான் மணி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருப்புமுனை.pdf/49&oldid=489799" இலிருந்து மீள்விக்கப்பட்டது