பக்கம்:திருப்புமுனை.pdf/51

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

49


“எங்கப்பாவுக்கு அவ்வளவு பணவசதி ஏதுடா? எல்லாம் நான் பரிசா வாங்கின புத்தகங்கள்தான்!”

“இனியன்! நீ புத்தகங்களை அடுக்கி வச்சிருக்கிற அழகைப் பார்த்தாலே அவைகளை எடுத்துப் படிக்கனும், போலத் தோணுதுடா. அமைதியான சூழ்நிலையிலேதான் நிறையப் படிக்க முடியும்’னு நம்ம ஆசிரியர்கூட அடிக்கடி சொல்வார். படிக்குமிடம் தெய்வ சந்நிதிபோல இருக்கணும்னு நான் எங்கேயோ படிச்சுக்கூட இருக்கேன்’டா,”

“உண்மைதான்’டா” மணி கூறியதை இனியன் முழுமனதோடு அங்கீகரித்தான்.

இனியனின் அப்பாவைத் தன் அப்பாவோடு மணி ஒருகணம் ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அது ஏக்க உணர்வாக வெளிப்பட்டது.

“இனியன்! உங்க அப்பா எவ்வளவோ தேவலை’டா. எங்கப்பா அதுக்கு நேர்மாற்றம்’டா. நிறைய படிக்காதே; படிச்சா மூளை குழம்பிடும்; உன் அண்ணன் மாதிரி மூளையிலே கட்டி வந்து செத்துப் போயிடுவே’ன்னு சொல்லி அடிக்கடி பயமுறுத்தறார். பாடப் புத்தகம் தவிர வேறு புத்தகங்களை வீட்டிலே படிக்கவே விடமாட்டார்’டா. எங்க வீட்டிலே எங்கப்பா கணக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருப்புமுனை.pdf/51&oldid=489801" இலிருந்து மீள்விக்கப்பட்டது