பக்கம்:திருப்புமுனை.pdf/52

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

குப் புத்தகங்களைத் தவிர வேறு புத்தகங்களைப் பார்க்கவே முடியாது. உனக்கு இருக்கிற படிக்கிற சூழ்நிலை எனக்கு இருந்தா நானும் எவ்வளவோ படிச்சு பரிசெல்லாம் வாங்குவேன்.

தன் ஆற்றாமையை வெளிப்படுத்தினான் மணி.

“மணி! நீ கட்டுரைப் போட்டியிலே சேர்ந்திருக்கிறது உங்கப்பாவுக்குத் தெரியுமா?”

“தெரிஞ்சா திட்டுவார்'டா!”

“உண்மையிலேயே உங்கப்பா ஒரு அதிசய மனிதர்தான்’டா.”

பேச்சை மாற்ற முற்பட்டான் மணி.

“கட்டுரை எழுத உதவற மாதிரி ஏதாவது புத்தகம் இருந்தால் கொடு'டா.” தான் வந்த நோக்கத்தை இனியனுக்கு நினைவுபடுத்தினான் மணி. தன் புத்தக அலமாரியிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து மணிக்கு நேராக நீட்டினான்.

“இதோ பார் மணி! அறிவுச் சுடர்'ங்கிற புத்தகம். நம்ம ஆசிரியர் எழுதியது. கட்டுரைத் தொகுப்பு நூல். இதிலே ‘உழைப்பே செல்வனும்’ ஒரு கட்டுரை இருக்கு. அதைப் படிச்சிட்டு போட்டிக் கட்டுரையை நீ எழுதலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருப்புமுனை.pdf/52&oldid=489802" இலிருந்து மீள்விக்கப்பட்டது