பக்கம்:திருப்புமுனை.pdf/56

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54


“கண்ணாயிரம்’ என்னடா முணுமுணுக்கிறே.” இக்கேள்விக்குக் கண்ணாயிரம் பதில் ஏதும் கூறவில்லை.

“இனியன் மேல் இருக்கும் பொறாமையை மென்று தின்கிறான்போல் இருக்கிறது.” என்று கூறி மணி கிண்டல் செய்தான். அதைக் கண்ணாயிரம் பொருட்படுத்தியதாகத் தெரிய வில்லை.

புத்தகத்தைப் பிரித்து உழைப்பே செல்வம்’ங்கிற கட்டுரையை அங்கொன்றும் இங்கொன்றுமாகப் படித்துப் பார்த்தான் தங்கதுரை. அவன் முகம் மகிழ்ச்சியாலும் நம்பிக்கையாலும் மலர்ந்து கொண்டிருந்தது. ஆழ்கடலில் தத்தளிக்கும் ஒருவனுக்குக் கரைசேர துடுப்புக் கிடைத்ததுபோல் அந்த நூலைக் கருதினான். அவனுள் நமபிக்கை பூத்து மணம் பரப்பத் தொடங்கியது.

“கட்டுரை ரொம்ப நல்லா இருக்குடா. இந்தப் புத்தகத்தை வச்சே முதற்பரிசு வாங்கிடலாம்’டா.” தன் நம்பிக்கையை வார்த்தைகளாக வெளிப்படுத்தினான் தங்கதுரை.

“காப்பியடிக்கிற கலைதான் உனக்குக் கை வந்த கலையாச்சே!” மணி கேலி செய்தான்.

இவர்களின் மனப்போக்கிலிருந்து வேறு பட்டவனாகக் கண்ணாயிரம் காணப்பட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருப்புமுனை.pdf/56&oldid=489806" இலிருந்து மீள்விக்கப்பட்டது