பக்கம்:திருப்புமுனை.pdf/59

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

57


இன்னிக்குத் திடீர்னு அது காணாமற் போயிடிச்சு. எங்கே தேடியும் கிடைக்கலே. எப்படி காணாமப் போச்சு"ன்னும் தெரியலே. அந்தக் கட்டுரையின் `ரஃப் காப்பி’ தான் சார் இப்போ என்கிட்டே இருக்கு. திருத்தப்படி எடுக்கவும் நேரமில்லே. சார்! நீங்க அனுமதிச்சா இந்த ரஃப் காப்பியையே போட்டிக்குத் தந்திடறேன்,சார்!”

“அப்படியா சங்கதி? அடித்தல் திருத்தல் இருந்தாலும் பரவாயில்லை. அந்தக் கட்டுரையைக் கொடு, போட்டியிலே சேர்த்திடறேன்.”

அன்போடு கேட்ட ஆசிரியரிடம், “இந்தாங்க, சார்,” என்று ரஃப் காப்பிக் கட்டுரையை நீட்டினான். அதை வாங்கிப் பார்த்த ஆசிரிய ருக்கு ஆச்சரியமாக இருந்தது.

“இதே மாதிரி தாள்'லே இதே மாதிரிக் கையெழுத்துள்ள கட்டுரையைப் போட்டிக்கு வந்த கட்டுரைகள்’லே பார்த்ததுபோல நினைவு இருக்கு. சரி, இருக்கட்டும். எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன், சென்று வா.” எனக் கூறி இனியனை அனுப்பி வைத்தார்.

ஆசிரியர் கூறியது எதுவும் இனியனுக்கு விளங்கவில்லை. ஏதோ குழப்பம் ஏற்பட்டிருக்கிறது என்பது மட்டும் தெளிவாகப் புரிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருப்புமுனை.pdf/59&oldid=489809" இலிருந்து மீள்விக்கப்பட்டது