பக்கம்:திருப்புமுனை.pdf/64

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62


யும், உடல் உழைப்பின் தன்மைகளையும் மேன்மைகளையும் அதனால் நாம் பெறக் கூடிய பயன்களையும் பல்வேறு சான்றுகளுடன் அருமையாக விளக்கியுள்ளான். பல்வேறு மலர் களிலுள்ள தேனை ஓரிடத்தில் கொண்டுவந்து சேர்க்கும் தேனி போன்று பல்வேறு நூல்களைப் படித்து, அவற்றை அடிப்படையாகக் கொண்டு சிந்தித்து, தெளிவாக எழுதியுள்ளான். அவனுக்கு என் பாராட்டுக்கள்.

“‘இளமையில் கல்’ என்றபடி படிப்பில் பேரார்வம் கொண்டு, தாம் கற்ற நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு என்ற பழமொழிக்கேற்ப, படிக்கும் காலத்தில் தம் சிந்தனையைக் கண்டபடி சிதறவிடாமல் நூல்களைக் கற்பதிலும் சிந்திப்பதிலுமே செலவிட்டால் அவர்கள் அறிவு வளர்ச்சியில் பெரு முன்னேற்றம் காண்பார்கள் என்பதற்கு இன்று முதற் பரிசு பெறும் மாணவனே தக்க சான்றாக உள்ளான் என்பேன். அறிவுத் திறம் என்பது பரம்பரையாக வருவது என்றாலும் இளமையில் நாம் பெறும் நல்ல ஊட்டச் சத்துதான் நம் மூளையைப் பலம் அடையச் செய்கிறது. நல்ல சூழல் நம் அறிவை வளமடையச் செய்கிறது. கடுமையான மன உழைப்பு நம் அறிவைக் கூர்மைப்படுத்துகிறது. அதோடு நம் எதிர்கால வாழ்வுக்கு அதுவே இணையற்ற ஏணியாக அமைகிறது. புகழையும் பொருளையும் வேண்டிய அளவுக்குத தேடித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருப்புமுனை.pdf/64&oldid=489815" இலிருந்து மீள்விக்கப்பட்டது