பக்கம்:திருப்புமுனை.pdf/69

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

67


கண்ணாயிரத்தின் சொற்கள் இனியனுக்குத் தேனாக இனித்தன. அவன் மன உறுதி அளவிலா மகிழ்வூட்டின.

“கண்ணாயிரம்! உழைப்பில் வாரா உறுதிகளில் உளவோ?ன்னு அறிஞர் ஒருத்தர் சொன்னார். ‘உழைப்பும் உயர்வும்’ங்கிற கட்டுரைத் தலைப்பு உனக்குப் பரிசு வாங்கிக் கொடுக்காட்டாலும் சரியான பாதைக்கு உன்னைத் திருப்பிய திருப்புமுனையா அமைஞ்சிருச்சு. உன் அறிவும் சிந்தனையும் சரியான பாதையிலே துரித நடை போட ஆரம்பிச்சிருச்சு. இதுவே உன் வாழ்க்கையிலே நீ பெற்ற பெரும் பரிசு’ன்னு சொல்லலாம்.

இவ்வாறு இனியன் ஆலுதலும் தேறுதலுமாகக் கூறிய ஊக்க மொழிகள் கண்ணாயிரத்தை புதிய ராஜ பாட்டையில் நடக்கத் தூண்டின. இருவர் உள்ளத்திலும் மகிழ்ச்சி தாண்டவமாடியது.


***

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருப்புமுனை.pdf/69&oldid=489820" இலிருந்து மீள்விக்கப்பட்டது