பக்கம்:திருப்புமுனை.pdf/72

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நூலாசிரியர்

`வளர் தமிழ்ச் செல்வர்"

கலைமாமணி

மணவை முஸ்தபா

சென்னை, அண்ணாமலைப் பல்கலைக் கழகங்களில் பட்டதாரியான கலைமாமணி மணவை முஸ்தபா சர்வதே இதழான யுனெஸ்கோ கூரியர் தமிழ் மாத இதழில் ஆசிரியர் ஆவார்.

‘இன்றைய தென்னக இலக்கியப் போக்கு’ முதலாக பன்னிரண்டு தமிழ் நூல்களை எழுதியுள்ள இவர். ஆங்கிலத்திலிருந்து எட்டு நூல்களையும் மலையாளத்திலிருந்து ஏழு நூல்களையும் தமிழில் பெயர்த்துள்ளார். இவரைத தொகுப்பாசிரியராகக் கொண்ட ஏழு தொகுப்பு நூல்களும் வெளிவந்துள்ளன. முப்பதுக்கு மேற்பட்ட வானொலி நாடகங்களையும் ஐந்து தொலைக்காட்சி நாடகங்களையும் ஏழு சிறுவர் நூல்களையும் படைத்துள்ளார்.

தென் மொழிகள் புத்தக நிறுவனத்துக்காக நாற்பத்தி மூன்று சிறுவர் நூல்களைப் பதிப்பித்துள்ளார். அவை புதினம். சிறுகதை, நாடகம், அறிவியல், சுற்றுலா பற்றிய பல்துறைப் படைப்புகளாகும். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக வானொலியில் சிறுவர் நிகழ்ச்சிகள் பலவற்றை எழுதியுள்ளார். சென்னை வானொலி நிலையை சிறுவர் நாடக விழாக்களில் இவரது நாடகங்கள் பல ஒலிபரப்பாகி, பாராட்டப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசின் திரு வி. க. விருது பெற்றுள்ளார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருப்புமுனை.pdf/72&oldid=493249" இலிருந்து மீள்விக்கப்பட்டது