பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன ◆ 109



கமலாட்சிக்குத் தேதி வைத்ததற்கு ஐந்தாம் நாள் கழித்து ஞானசீலன்-வாணி கல்யாணத்திற்கு நாள் குறித்துக் கொடுத்தார் புரோகிதர்.

அதற்குள் பட்டணத்துக்குப் புறப்பட்டுத் திரும்பி விட வேண்டுமென்பது அவர் முடிவு. 'என் அதிபரின் அன்பையும் பண்பையும் எப்படிப் புகழ்வது?'

வெயில் ஏறுமுகம் காட்டியது.

வாணி வீட்டுக்குக் குளித்து முழுகி வரவேண்டிய கெடு.

எதிர்நோக்கிக் கிடந்தார் எழுத்தாளர்.

அப்பொழுது, புடவைச் சலசலப்புக் கேட்வே ஆவல் மீதுரத் திரும்பினார் அவர்.

வாணி இல்லை!

பின்.?

தவசீலி நின்று கொண்டிருந்தாள்.

"வணக்கம் லார்!"

"வணக்கம்.வணக்கம்..!"

"செளக்யமா ?"

"ம்!"

"அப்பா நலமாக இருக்கிறாரா?"

"நலமாக இருக்கிறார்.சொர்க்கத்தில்?"

"ஆ"

"ஆமாம், அவர் கதை முடிந்து ஒரு மாசத்துக்கு மேலாகிறது!"

"நீங்கள் இப்போது?"

"அனாதை!"

'திக்கென்று அவருக்கு.

"ஆசிரியர் லார்!"