பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன ◆ 39



வாணி இப்பொழுது அமைதியாகப் பெருமூச்சு விடலானாள்.

மண்டை ஓட்டில் நோவு கண்டது. ஆகவே படுக்கையில் சாய்ந்து சிறு பொழுதுவரை ஓய்வு கொள்ள வேண்டுமென்று தோன்றியது. ஆகவே, படுத்துத் துரங்கப் பிரயத்தனம் செய்தார் ஞானசீலன். அதற்குள் கைவளை குலுங்க, மென்னகை துளும்ப, எழில்விழி சிந்துரம் சிந்த வந்தாள் வாணி. வந்தவள், நிற்கவில்லை; நிலைக்கவில்லை. எடுத்த எடுப்பிலேயே படபடப்புக் குறையாத குரல் எடுத்து, "ஸார், நான் நேற்றுத் தந்துவிட்டுப் போன லெட்டருக்குப் பதில் தயாரிச்சுப்பிட்டீங்களா? என் கிட்ட இப்பவே 'சப்மிட்' செஞ்சிடுங்களேன்!” என்றாள்.

வியப்பு விரிந்த நேத்திர நோக்கை, வினயம் புரிந்த பெண்ணின் திசைக்குத் திருப்பிய ஞானசீலன் ஓர் அரைக்கணம் இன்பத் தவிப்பில் சுழன்றார். பிறகு, ஆசுவாசப் பெருமூச்சுடன் பதில் கொடுத்தனுப்ப எண்ணமிட்டு, அவதியுடன் காகிதத்தை எடுத்து, அவசரத்துடன் பேனாவைத் துரக்கிக் கொண்டு எழுதுவதற்கு உட்காரப் போனார். அப்பொழுது சென்னையிலிருந்து உடனே புறப்பட்டு வரும்படி 'எக்ஸ்பிரஸ் லெட்டர்' வந்து சேர்ந்தது. 'உரிமையாளர் அவசரமாக உங்களுடன் சொந்தக் காரியமாகப் பேச விரும்புகிறார். ஆகவே, உடனே புறப்பட்டு வாருங்கள்,' என்று நிர்வாகி எழுதியிருந்தார். என்ன சொந்தக் காரியம் அது.ஸ்.ஸ்பென்சுகள் ஒன்றன் பின்னொன்றாகக் காத்திருந்து என்னை மோதுகின்றனவே! ஆமாம், இந்தப் பெண் வாணிக்கு என்ன பதில் எழுதுவதாம்?...'

ரேடியோப் பெட்டி 'தேவமனோஹரி' ராகத்தை இசைத்துக் கொண்டிருந்தது.