பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமணங்கள் செர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன ❖ 67


கேட்டுக் கொண்டே, ‘சி...க...ரெட்’ என்று ‘ஜாடை’ காட்டிக் கண் சிமிட்டித் தொடர்ந்தான்.

ஞானசீலன் மெல்லச் சிரித்தார். பையன் ராதாவைப் பற்றி அவருக்கு எப்போதுமே அனுதாபம் உண்டு. “மனிதர்களின் அன்புக்குப் பாத்திரமாவது அவ்வளவு விரும்பத் தக்கதல்ல,” என்று அவர் ஒரு கதையில் எழுதியதை மறக்காமலேயே, அந்தச் சிறுவன் பேரில் அனுதாபம் கொண்டார். அனுதாபம் என்றால் அன்பின் வழிப்பட்ட அனுதாபம்! குற்றவாளி ராதாவா? அல்ல! நான்தான்! தன்மீது அனுதாபப்படும்படி அவனா என்னிடம் சொன்னான்? அப்படிச் சொன்னால்தானே தப்பு! இதுதானே என் கருத்து?...

காப்பிக்கு உத்தரவிட்டபடி, காப்பி வந்தது.

ஆணைக்குக் கட்டுப்பட்டு, ஆனந்தனை அழைத்து வந்தான்.

ஆனந்தனும் ஞானசீலனும் அடுத்ததாக அச்சிடப்பட வேண்டிய ‘பார’ங்களைப் பற்றிப் பேசினார்கள். ஆனந்தன் நீட்டிய அச்சுப் படிகளைக் கையேந்திப் பெற்றார். புழுதிக் கோயில் என்ற அவரது தொடர் கதையின் இறுதிப் பகுதி அது. “பெண்மை வாழ்க!” என்றிருந்த அத்தியாயத் தலைப்பின் கீழே தடித்த எழுத்துகளில் அச்சுக் கோர்க்கப்பட்டிருந்த வாசகத்தை நட்ட நடுவில் பார்த்தார்.

“சிறுவர்களும் சிறுமியர்களும் ஒழுங்கை நெடுகக் குறுமணல் குவித்து மணல் வீடு கட்டி விளையாடும் பொழுதில் பொய்ச் சோறு சமைத்துச் சாப்பிடுவதாகப் பாவனை செய்வது போலவேதான், இந்தச் சமுதாயத்தில் காதல் என்பதும் ஒரு பொய் விளையாட்டுத்தான்!... ஒட்டும் இரு உள்ளங்களை