பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன ✽ 87




ஏடு ஒன்பது:

கோமளம் என் பால்ய சிநேகிதி. அந்த நாளில் எனக்கு உண்டி கொடுத்தார் அவள் அப்பா. இப்போது செயலிழந்து விட்டார். ட்யூஷன் சொல்லிக் கொடுத்த சம்பளத்தைத் தரவேண்டுமென்று எதிர்பார்த்தாள் அவள். அவ்வாறே செய்தேன். என்றையும் விட, அன்று தினம் ராத்திரி எனக்கு நல்ல தூக்கம் வந்தது.

ஏடு இருபது:

ஆகா! ஆசிரியர் ஞானசீலனின் எழுத்துக்களைப் படிக்கும் பாக்யம் கிடைத்ததே, அதுவே எனக்குப் பெரிய ஆறுதலாகத் தோன்றுகிறது. வாழ்க்கையை வாழ்க்கையாகச் சித்தரிப்பதில் வல்லவராகவே இருக்கிறார். அவர் அறிமுகம் கிட்டியதுகூட பூர்வ ஜென்மப் பலனாகத்தான் இருக்க வேணும். இல்லாது போனால் எனக்கு அவர் பழக்கமும் அன்பும் கிடைத்திருக்கக் கூடுமா என்ன?,

ஏடு இருபத்து மூன்று:

"அவர் ரொம்பவும் நல்லவர். இதயம் படைத்த எழுத்தாளர். என்னையும் அறியாமல் என் அனுமதியையும் எதிர்பாராமல், என் உள்ளம் அவரையே சதா ஏன் நாடுகிறது?.

ஏடு முப்பது:

அவர் தன் கதையில் எழுதியிருப்பதில் ஒரு இடம் எனக்கு ரொம்பவும் பிடித்து விட்டது. "தியாகம் என்ற குணநலன் சொல்லிக் கொண்டு வருவது இல்லை; சொல்லியும் தெரிவது கிடையாது. உள்ளத்தில் உதிரத்துடன் ஊறிப்பக்குவப்படுத்தும் இப்பண்புதான் மனிதனை