பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 ரொம்ப மிதமிஞ்சிப் போச்சுப்போலே, இல்லாட்டி, தனக்கு வருகிற வரும்படியை விட்டுப் போட்டு, டாக் டர் ஐயாவை எதற்குக் கைகாட்டிப் போகணும்?...... டாக்டர் பணத்திலே குறிகாரர்னு முந்தாநாள்கூட யாரோ பேசிக்கிட்டாங்க. அவருக்குப் பத்து அஞ்சு கொடுக்கிறதுக்கு இப்ப நான் எங்கே போவேன்? என்று நெஞ்சம் நெக்குருகினன் கறுப்பன். தெரிந்த எசமானர்’களிடம் பல்லேக் காட்டி , வழி மறித்திருக்கும் தலைவிதியை எடுத்துக் காட்டி, பணம் கடன் கேட்டான். தவணை வைத்து, ' வட்டிக்காசையும், தந்திடறேனுங்க, காசு பணம் ஏதும் வாங்காமல் உங்கள் துணிமணிகளையெல்லாம் சலவை செஞ்சு தாரேனுங்க!” என்று என்னவெல்லாமோ சொல்லிப் பார்த்தான். எந்தக் கணையும் அவனுக்கு நல்ல பதில் கூறவில்லை. கடைசியில் ஏமாற்றமே உயிராகக் குடிசையின் உள் வீட் டறைக்கு நடந்தான். கள்ளிப்பெட்டியைத் துழாவினன்; செப்புத் திருகாணிகூடக் கைக்குள் சிக்கக் காணுேம். மிள காய்ப் பானைக்குள் கையை நுழைத்தெடுத்தான். ஏதோ ஒரு பொருள்! பார்த்தான். திடுக்கிட்டான். தாலி! தங்கத்தாலி: ராக்காயியின் கழுத்தில் இருபத்தொன்பது வருஷங்களுக்கு முன் பூட்டிய மங்கலச் சின்னம் அது. நினைவுகள் தறிகெட்டுச் சுற்றின; அவன் பம்பரமாகக் சுழன்ருன். மூன்ரும் மாசம் ராக்காயி குளித்துக்கொண் டிருக்கையில், தங்கத் தாலியின் பின் பக்க இணைப்பில் பிளவு கண்டிருப்பதை உணர்ந்தாள்: மஞ்சள் ஒன்றை வீட்டுக்கு வந்து எடுத்துக் குலதெய்வத்தை நேர்ந்து கொண்டு மஞ்சள் தடவின கயிற்றில் முடிந்து கழுத்தில் அணிந்து கொண்டாள். ஆசாரியிடம் பத்தவைச்சுத் தந்திடுறேன்!” என்று மனைவியிடம் அளித்த உறுதியைச் செயற்படுத்துவதற்கு அவனுக்கு ஒய்வு இடங் கொடுத் தால்தானே? - - -