பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iš 4 காலையில் அவன் முடிவு கட்டியிருந்த தீர்மானம் மீண்டும் நினைவில் எழுந்தது. இனிமேல் சாப்பாடு தயார் பேண்ணுகிற சோலி விட்டுடுச்சு. சொக்கப்பனும் சுறுசுறுப்பாக வேலை வெட்டியைக் கவனிச்சுக்குவான்... என்னமோ மருமகப் பொண்ணு பொன்னம்மா வீடு மிதிக்கிற வேளை கூடிவர வேணும்!” சாப்பாட்டு ஏப்பம் ஒய்வு கண்டவுடன், தம்பி, இத்தனை நாளேக்கப்பறம் இன்றைக்குத்தான் வாய்க்கு ருசியாகச் சாப்பிட்டேன்; இனிமேல் இது மாதிரியே சாப்பிடலாம் நீயும் நானும், வருகிற மாசத்திலிருந்து... பொறக்கற மாசம் ஒனக்குக் கண்ணுலமாக்கும்...... ஆமாம்; பொண்னு பொன்னம்மாவேதான்!” என்று விளக்கம் தந்தான் கறுப்பன். புதுக்கோட்டைக்குப் புறப்பட எண்ணிஞன் கறுப்பன். ஏழு நாழிகைப் பொழுது இருக்கும்போதே எழுந்துவிட வேண்டும் என்பது அவன் திட்டம்: கட்டுச் சோறு தயாரானது. சிம்ணி விளக்கை எடுத்துக்கொண்டு உள்ளே சென்று மிளகாய்ப் பானைக்குள் கையை விட்டான். தேடி வந்த தங்கத் தாலியையும் எடுக்க வேண்டாமா? மறுவிடிை, தேள் கொட்டினுற்போவத் துடித்துப் போனன். தேள் அதனுள் இருந்தால்தானே? பாவம், அவன் பத்திரப்படுத்தி வைத்திருந்த தாலியும் சங்கிலியும் அங்கே இருக்க வேண்டாமோ?... எங்கே மறைந்ததோ? . சொக்கப்பன் குறட்டை ஒலி பரப்பிக் கண் வளர்ந்து கொண்டிருந்தான். . . ஏலே, சொக்கப்பா! மிளகாய்ப் பானையிலே போட்டிருந்த தங்கத் தாலியும் சங்கிலியும் காணுமல் போயிருக்கே? நீ எடுத்தியாடா