பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16'i போஸ்டில் வந்திருந்த கடிதங்கள் அத்தனையை ஆயும் உள்ளே வாரியெடுத்துக் கொண்டு ஊஞ்சலில் வந்தமர்ந்தாள் கலோசன. ஒன்று போல இருந்தது கடித உறையின்மேல் எழுதப்பட்டிருந்த விலாசத்தின் கையெழுத்து. உள் மனம் அவளுக்கு மகிழ்ச்சியின் ரேகையைக் காட்டியது. பதட்டத்துடன் அவற்றைப் பிரித்தாள். என்ன ஆச்சரியம்! அங்கே ஆச்சரியம் அணி வகுத்து நின்றது. கிழிக்கப்பட்ட கவர் ஒவ்வொன்றிலும் இருபது, முப்பது, என்று கரன்ஸி நோட்டுகள் இருந்தன. அவை ஒவ்வொன்றிலும் வெள்ளைக் கடுதாசி ஒன்று இணைக்கப்பட்டிருந்தது. அதில் ராகவன்’ என்ற பெயர் மட்டும் இருந்தது. கவரைப் பார்த்தாள். மெட்ராஸ்" என்ற முத்திரைமட்டும் அரை குறையாகத் தெரிந்தது. சுலோசவுைக்கு ஆனந்தம் வரவில்லை; ஆத்திரமும் அழுகையும் போட்டியிட்டன. ஏன் இப்படி அவர் நாடகம் போடுகிருர். இத்தனை நாள் கழித்து என் ஞாபகம் வந்ததே பாக்கியம்தான். ஆனால் அவர் ஏன் தன் இருப்பிட விலாசத்தைத் தெரிவிக்கவில்லை. அன்று ஆத்திரத்தில் வீசிய சுடுசொல்லின் வெம்மையை இன்னும் அப்படியே நினைத்துக் கொண்டுதான் இப்படி என்னைச் சாருகக் கசக்கிப் பிழிகிருரா உயிருடன்...? இவ்வளவு பெரிய பட்டணத்தில் என் அத்தானை நான் எங்கு சென்று தேடுவேன்...? என்றைக்கு அவர் பாதங் களை என் கண்ணிரால் கழுவி அவரது மன்னிப்பைப் பெற்று ஆனந்தப்படுவேன். சீர்கெட்ட எங்கள் தாம் பத்திய வாழ்வில் சிருங்காரப் பண் பாடச் செய், தெய் வமே...! இப்போது எனக்குப் பணம் தேவையில்லை. அது தான் கொட்டிக் கொடுத்திருக்கிருயே. அவரல்லவா