பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களங்கமில்லாத முகம்; இன்பத் துடிப்பை உதிர்க்கும் புன்னகை; கதை படிக்கும் கண்கள்-ஆம்; கண்கள் ஐயோ-அந்தக் கண்! மூடுபனிக்குப் பின் காட்சி தரும் உருவம் மாதிரி தான் ரோகிணியினுல் அந்தப் பிம்பத்தினைக் காண முடிந்தது. பல ஆண்டுகள் முன் நடந்த அச் சம்பவத் தின் தொடுவளையத்தில் அமர்ந்தது அவள் மனம். அப்பொழுது அவளுக்கு எட்டு வயதிருக்கும். அவ னுக்குப் பத்து வயது நிறைவு. ரோகிணி அந்நாளில் காமுவாக இருந்தாள். அவன் பெயர் ராமு. ராமுவின் தந்தை ஏழை உபாத்தியாயர். காமு பணக்கார வீட்டுப் பாப்பா. இருவருக்கும் அண்டை வீடுகள். பிஞ்சு உள்ளங்கள் அண்டி அணையச் சந்தர்ப்பங்கள் பயன் பட்டன. பயனளிப்பதற்கெனவே தான் இந்தச் சந்தர்ப் பங்கள் தோன்றுகின்றன போலும்! அன்று காலே பள்ளிக்கூடம் போகப் புத்தகங்களுடன் அவள் வீட்டுக்கு ராமு வந்து சேர்ந்த தருணம், காமு பட்டாஸ் சுட்டுக்கொண்டிருந்தாள். அவன் வீட்டினுள் அடிபெயர்த்து வைப்பதற்கும், அவள் வீசி எறிந்த வானம் வெடிப்பதற்கும் பொருந்தியிருந்தது. வெடி யின் சிதறல் ராமுவின் கண்களைத் தாக்கியது. அவன் சுருண்டு விழுந்தான். ஐயோ ராமு என்று அலறி யடித்துக்கொண்டு ஓடி வீட்டில் செய்தி சொன்னுள் காமு. அவள் பெற்ருேர்கள் பதறிஞர்கள். ராமுவின் வலது கண்ணினின்றும் ரத்தம் பீறிட்டது. டாக்டர் பார்த்துச் சிறுவனின் ஒற்றைக்கண் பயன்படாதென்று தெரிவித்தார். நேரில் சென்று ராமுவின் தந்தையிடம் மன்னிப்புக் கோரி, செலவுக்கு இருநூறு ரூபாய் கொடுத்துச் சிகிச்சை பெறப் பட்டனத்துக்கும் அனுப்பி வைத்தார் அவள் அப்பா. * ...,