பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

183 கொண்டிருப்பதுபோல அவள் உள்மனம் சொல்லியது. அவள் அவனைப் பார்த்தாள். தாடியும் மீசையுமாகக் கிடந்த அவனைக் கண்டதும் அவள் மனம் மாற்றம் காட் .டியது. ராமுவை அவ்வுருவில் ரோகிணியால் தடம் கான முடியவில்லை. சுயநினைவு பெற்ற ரோகிணி கண் மலர்களே இதழ் விரித்தாள். அவள் கண்ணுேட்டம் சூன்யத்தில் நிலைத் தது. நாடோடியைக் காணுேம். அவள் இதயம் சூன்ய கோளமாகப் பரிணமித்திருந்தது. ராமுவின் படத்தை வரைந்து அதன் மூலம் ஒரளவு சாந்தி பெற எண்ண. எழுதிய படத்தில் டைரக்டர் பிரபாகரனின் உருவத்தைக் கண்டது-சற்று முன்வந்த நாடோடி கூறிய கதை தன் பிஞ்சுப் பிராய நிகழ்ச்சியை எடுத்துக் காட்டியது-இவை அவள் பேதை நெஞ்சத் தைப் பேதலிக்கச் செய்தன. மேஜைமீதிருந்த சித்திரத்தில் வலது கண்ணினின் றும் வழிந்திருந்த செந்நிறம் காய்ந்துவிட்டிருந்தது. அதே கணம் நாடோடியின் வலதுகண்ணிலிருந்து வழிந்த ரத்தக் காட்சியை நினைவுகூர்ந்தாள். அவள் நயனச் செம்புகளில் கண்ணிர் மட்டமாகத் தளும்பி வழிந்து கொண்டிருந்தது. அன்று சிரித்த ரோஜா படப் பூர்த்தியின் தேநீர் விருந்து. கதாநாயகியாக நடித்திருக்கும் ரோகிணியின் புகழ் பாடப் பிரசங்கமும் ஏற்பாடு செய்திருந்தார் டைரக்டர் பிரபாகரன். புறப்படத் தயாராக இருந் தாள் நடிகை. அவள் உள்ளம் அனல் பட்ட பூவாக வாடிக் கிடந்தது. குழம்பிக் கிடந்த அவள் மனத்தில் டைரக்டரை இனி எந்த முகத்தைக்கொண்டு காண முடி யும்? நான் எழுதிய கடிதத்தைப் பார்த்திருப்பாரே' என்ற எண்ணங்கள் பேய்க் கூத்தாடின.