பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 மறுபடியும் வீட்டிலே விளக்கு ஏத்தி வைக்க ஆசை துள்ளுது. அதுக்கு நம்ப பவளக் எனக்குக் கொடுத்திட்டா எம்பிட்டோ சீரா வச்சிருப்பேன்.” இப்படிப் பேசினுன் அம்பலம். கிழவிக்குத் தாக்கி வாரிப் போட்டது. பவளம் கதவைப் படீரென்று சாத்தினுள். ஆக, மூன்று உள்ளங்களிலிருந்தும் நீண்ட பெரு மூச்சுப் புறப்பட்டது! "என்னு அக்கா, ரொம்ப யோசனை செய்யிறே? இடம் தேடி வருகுது சீதேவி. வார கிழமை நல்ல நாள்; பரிசம் போட்டுடலாம்.” கிழவி திரும்பவும் சிலையானள். 'அக்கா, என்ன பதிலே பேசல்லே. பவளக்கொடி அந்தப் பயல் நடேசனைக் கையிலே போட்டுக்கலாமின்னு நினைச்சிருக்கும். விதி யாரை விட்டுச்சு? இல்லாத போன அந்த அனுதைப் பய செத்திருப்பான? ம், முடிவான சொல் இது. உன் மகள் எனக்குத்தான். அதுக்கு ஏற்பாடு செஞ்சுத்தான் ஆகணும்.” கணத்தில் வில் வண்டி பறந்தது. அதிகாரம் வரிசை செலுத்தப் பேசிச் சென்ற தம்பியின் உத்தரவைக் கேட்டுச் செல்லி பிரமித்தாள்; சுவர் ஒண்டலில் நின் றிருந்த பவளக்கொடி வாய்விட்டுக் கதறினுள். அவளுக்கு அந்த ஒரு ஏச்சு-அதுவும் இறந்த நடே சனைப் பற்றிய கேலி அவளே வெகுவாகத் துன்பப்படுத்தி யது. ஆசை மச்சானின் அன்பு முகம் அவள் முன் தோன் றியது. அவனது ஆதரவு வார்த்தைகள் கணிரென்று ஒலித்தன. அவள் கண்ணிர் பெருக்கினுள். .