பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

193 விண்ணேச் சாடியது அவள் பார்வை. கற்பனை போல எல்லையற்ற வண்ண விதானமே, நீயாகிலும் அவளுக்கு இதமொழி சொல்லாயா? அமிர்தம் பொழிந்த நிலவைப் பார்த்தாள். நிறை மதியே, உன் சீதளக் கதிரெனச் சில வார்த்தைகளை அவளுக்குக் கூறிச் சாந்தி செய்யமாட்டாயா?

பவளக்கொடி.”

"ஆயர். கேட்டியா சேதியை?’’ $ 3 கேட்கிறது என்ன ஆயா. மாமா துப்பு இப்பல்ல புரியுது. கண்ணுலமா? எனக்கா? மச்சானை மறந் துட்டா? ஒருக்காலும் ஏலாது. காளி மேலே சத்திய மிட்டுச் சொல்லுகிறேன். இனி மச்சான் ஞாபகம் ஒண்டியே எனக்கு உலகம். மாமா கிட்டே சங்கதியைச் சொல்லிப் போடு.”

பவளம், கலங்காதே. உன் எண்ணத்துக்குக் குறுக்கே நான் எதுவும் செஞ்சிட மாட்டேன்.”

மறுமுறையும் அம்பலம் வந்தபோது தன் மகள் ஒப்ப வில்லை என்று சொல்லியதைக் கேட்ட அவன் தீப்பறக்கப் பேசிச் சென்ற வார்த்தைகள் அவளைச் சித்திரவதை செய்தன. அவள் கொடி போலத் துவண்டு போனள். என்ன திமிரு மாமன அவன்? பணம் ஒண்ணு இருந்தாக்க அல்லாரையும் கொடி கட்டி ஆண்டிட முடியு மாக்கும். அவன் பணம் அவளுேடே. என்னை அவனுக் குக் கல்யாணம் பண்ணித் தராமப் போன ஆளேயே தூக்கிட்டுப் போயிடுவானுமே. அதுக்குத்தான் சம் யுக்தை - பிருதிவி மகாராசா காலங் கூடப் புல் முளேச்சுப் போச்சுதே.” × く