பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65


அதே நேரத்தில், தரையில் வழி தப்பிக் காற்றில் அல்லாடிக் கிடந்த அந்த நோட்டிசைக் கையிலெடுத்துப் பார்த்தான். அவன் மறுபடியும் பலமாகச் சிரிக்கத் தலைப்பட் டான்! பசி ஆசையை, வளர்ப்பதற்குப் பதிலாக, அனேக் கப்பார்த்தது. பலே! ஒரு ரூவாகெடைச்சிட்டுதே! நாமளும் ஒரு டிக்கெட் வாங்கிக்கிறது. அந்த நாட்டியக் கூத்தைப் பார்த்தாக்க என்ன? பிச்சைக்காரன் காசு குடுத்தாக்க, நாட்டியம் பார்க்கிறதுக்கும் தடை போடு றவங்க இருக்க ஏலுமாக்கும்!...ஊம்...” கலைக்கூடத்தை அலங்கரித்தன. ஒளிவிளக்குகள். ரசிக மகா ஜனங்கள் கலையை வாழ்த்தக் கூடியிருந் தார்கள். பிச்சைக் காரனும் அங்கு தரிசனம் தந்தான். மணி ஒலி கக்கியது. விளக்குகள் ஒளி கக்கின. அணைந்த ஒளிக்கு ஊடே, அணையாத தீபமான கலா மோஹினி தோன்றிள்ை. ஆடினுள். ஜதி லயம் தாளக்கட்டு இணைய பிரார்த்தனை ஆரம்ப மாயிற்று. அஞ்சலி முத்திரை பாவம் அற்புதமாக வாய்த்தது. ஆடினுள். எப்படி எப்படி ஆடினுள். ஆட்டம் முடிந்தது. கலாமோஹினியின் நடனத்தை வான்முட்டப் புகழ்ந்தார்கள் பெரிய மனிதர்கள் பலர்!