பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88


பரிபூரணம் அடைகிறது. அவள்-உங்கள் மனைவி; உங் களுக்குரியவள்; உங்கள் வாழ்வுதான் அவளுக்கு உயிர். அவள் வாழ்வும் வளமும்தானே உங்கள் மூச்சு! நீங்கள் அறியாததல்லவே சிதம்பரம், இவையனைத்தையும். கடந்தது கண்ணிருடன் கழிந்தொழியட்டும். உங்கள் மனைவியின் வருங்காலத்தை-நாளேப் பிறக்கவிருக்கும் நாளைத் திருநாளாக்குங்கள்...இது உங்கள் கடமை; அக்கினி சாட்சியாக உங்கள் மறுபாதி’க்கு நீங்கள் அளித்த வாக்குறுதியுங்கூட...” என்ருன் ராமனதன், குரலில் உணர்ச்சி சுழித்தோட.

  • ராமனுதன், என் கடமையை நினைவு படுத்து கிறீர்கள். ஆனல் அவள் கடமை? கொண்ட கணவனின் கவலையைப் போக்கக் கவலையில்லாமல், வெறும் நகைப் பைத்தியமாக அலைவதுதான? இப்போது நினைத்தால் கூட நெஞ்சு குமுறுகிறது. அப்பொழுது வேலைபார்த்து வந்த கம்பெனியில் நான் பொறுப்பேற்றிருந்த காஷியர் வேலையில் அன்று இருபது ரூபாய் திட்டக் குறைச்சல் ஏற்பட்டது. அடுத்த நாள் ஆடிட்டிங் நடப்பதாக இருந்தது. விஷயத்தை ஒருமட்டாக அவளிடம் சொல்வி அவள் அப்பா செய்துபோட்ட ஒற்றை வடச் சங்கிலியை அடகுவைத்து இருபது ரூபாய் பெற்று கணக்கை நிரவல் செய்துவிட்டால் விரைவிலேயே எப்படியும் நகையை மீட்டுத் தருவதாகக் கெஞ்சினேன். அவள் பெண்ணுக இருந்தும் இவ்விஷயத்தில் பேயாளுள். என் வேண்டு கோளையும் மறுத்துவிட்டாள். கடைசியில் எப்படியோ ஒருமாதிரி பணத்தைக் கட்டிக் கணக்குப் பார்த்ததில் நான் தான் வரவு செலவுப் புள்ளிகளை மாற்றி எழுதி விட்டது புரிந்தது. அன்று வைத்த வைராக்கியம் இன்று வரை மாறவில்லை. மாதங்கள் இருபது ஆகின்றன. இனியுமா அவளே அழைத்து நான் வாழ்க்கைத்.