பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 பிழைப்புக்கென்று வாயில் வந்ததை உளறுகிருர்கள்; பேனு வில் வந்ததைக் கிறுக்குகிருர்கள். எல்லாவற்றிற்கும் இவர் களுக்குச் சில்லறை கிடைக்கிறது!-சில்லறைப் பேர்வழி களல்லவா? இந்தப் புண்ணியவான்கள் அன்று ஒரு கூட்டமாக இருந்தார்கள். புகழ்ப் பரிவர்த்தனை செய்து கொண்டார்கள். ஆளுல் இந்தப் புகழ், இரவல் புகழ் என்பதை நீங்கள் அறிய வேண்டாமா? பாவம், யான்காப்ரில்! பாவம்,மாப்பஸ்ான்!... சிறுகதை இலக்கியம் செழித்துத் தழைக்க ஆரம்பித்து ஆண்டுகள் பல ஆகிவிட்டன. இதற்குக் காரணம் உங்களது ரசிகத்தன்மையே அல்லவா? நீங்கள் ஒரு புதிய முறையைப் பழகிக் கொள்ள வேண்டும். தமிழ்க் கதைகளைப் படிப்ப துடன் நிற்காதீர்கள். அத்துடன், மேலைநாட்டுக் கதைகளை யும் படிக்க வேண்டும். கதைகளைச் சுண்டிப் பார்க்கும் பண்பு உங்களுக்குக் கைகூடி வரும். அப்போது, தமிழ் இலக்கியம் இன்னும் வளர வாய்ப்புப் பெற முடியும். இந்நிலைக்கும் உங்களுடைய ரசிப்புத் தன்மைதான் ஆதாரம் நல்க முடியும். அப்புறம், இலக்கியத்தின் திருடர்களின், இலக்கியத்தின் வாய்ச் சவடால் பேர்வழிகளின் உண்மைச் சொருபங்களை 'இனம் கண்டுகொள்வீர்கள்! தமிழ் இலக்கியம் இன்னும் மேலே மேலே நேரிய முறையில் வளரவும் வழி பிறந்துவிடும். என்னைப் போன்றவர்கள் அமைதியும் பெருமையும் கொள்ள முடியும். - மனேதர்மமும் மனப்பண்பாடும் எழுத்தின் ஜீவநாடி -களாகின்றன. இவ்வகைப்பட்ட சமூக உணர்வுடன் கூடிய கதைகள் சில இப்பொழுது உங்களுடைய இலக்கிய ஆர்வத் துக்கு விருந்து வைக்கக் காத்திருக்கின்றன. திலப்புக்குக் கதை, இத்தொகுப்புக்கென்று எழுதப்பட்டது. மிகவும் துட்பமான கதை: பிரச்னைக் கதையும்கூட. இயல்பாகவே அமைந்துவிட்ட பிரச்ன்ை. ராணிக்குப் பிரச்னைகள் சகஜம். அவள் பெண்; தமிழ்ச்சின்திப் பெண்! -