பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122


நிறைந்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன். உள்ளம் நிறைந்த நம் அறிமுகம் ஆயிரங் காலத்துப் பயிராகப் பரிணமிக்க வேண்டிய தாம்பத்திய உறவுக்கு, பிணைப்புக்கு அடிப் படை அல்லவா? இப்படிப்பட்டதொரு சந்தர்ப் பத்தில் என்னைப்பற்றி நடந்த கதை"யும் உனக்குச் சொல்ல வேண்டியதுதானே? மீன, எனக்குச் சென்ற வருஷம், முதல் திருமணம் நடந்தது, ஒராண்டு நிறைவதற்குள் அந்த முதல் மனைவி என்னிடம் தன் ஞாபகச் சின்னமாக ஒரு சிசுவை அடைக்கலம் வைத்து விட்டு நிம்மதியுடன் என்னைத் தவிக்கவிட்டுப் பிரிந்தாள். அவள் பிரிவு இட்ட இடைவெளியை இட்டு நிரப்ப நான் உன்னே இரண்டாந் தார மாகக் கல்யாணம் செய்து கொள்கிறேன் என்பது என் மட்டில் ஒவ்வாதது. நீ அதிசயப் படுகிருய் அல்லவா? ஆம்; என் செல்வம்ராதை யைப் பராமரித்துக் காப்பாற்ற, பொறுப் புணர்ச்சி வாய்ந்த தாய் ஸ்தானத்தை அன்பு இதயத்துடன் நிர்வகித்துப் பேணுபவளாக நீ அமைய வேண்டுமென்பதே என் ஆசை யாகும். என் பிள்ளைக் கனியமுது ராதைக்கு நீ அன்னையாக வாய்க்கும் நல்லெண்ணம் உனக்கு இருந்தால் உடனே பதில் போடு. நாம் மணவறையில் கொட்டு மேளம் முழங்கச் சந்திப்போம், கணவன் மனைவியராக! சுகுமாரன்.” பிரித்துப் படித்த கடிதத்தை மறுபடியும் டிராயரின் மூலையில் திணித்துவிட்டுத் திரும்பினள். சுவரில்