பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鬣8 அதே தருணம், டாக்டர் சுதாகரரிடமிருந்து தன் துணைவருக்கு வந்திருந்த கடிதத்தையும் அவள் வாசித் தான். கடிதத்தில் காணப்பட்ட தங்கள் சாரதா என்ற வார்த்தைகள் பெருமூச்சுடன் கலந்து வெளி வந்தன. அவளது சிமிழ் உதடுகளேவிட்டு. மீளுவின் மனம் கிர் கிர் என்று தட்டாமாலை சுற்றியது. அந்தச் சுழலிலே, யார் இந்தச் சாரதா? இவளுக்கும் என் கணவருக்கும் என்ன சம்பந்தம்? முதல் மனேவி சாரதாவா இவள்? அப்படியென்ருல் அவள் இறக்கவில்லையா? என் கணவர் சொன்னதெல்லாம் பொய்தான?’ என்ற கேள்விகள் அருகருகாக இடி முழக்கம் புரிந்தன. 5 ஆம், யார் இந்தச் சாரதா? அவளுக்கும் டைரெக்டர் சுகுமாரருக்கும் என்ன சம்பந்தம்? அதுதான் கதை: தன்னை மட்டுமே பேணிக்கொள்ளும் அளவுக்குத் தான் அந்நாளைய சுகுமாரனுக்குத் தெம்பு இருந்தது. பையனைப் பி. ஏ. பட்டதாரியாக்கிவிட்ட பெருமையுடன் அவன் பெற்ருேர்கள் விதிவழி ஏகினர். அடிநாளில் அவ னுக்குப் போட்டோ சம்பந்தங்கொண்ட எல்லா விஷயங் களிலும் ஈடுபாடு, ஆசை உண்டு. அந்த ஈடுபாடும் ஆசை யும் ஏதோ ஒரளவுக்கு அப்பொழுது அவனுக்குக் கையுதவி புரிந்தன. பட்டத்தைத் துார ஒதுக்கி வைத்து விட்டு, சுகுமாரன் போட்டோ ஸ்டுடியோ ஒன்றில் சாதாரண வேலைக்கு அமர்ந்தான். காமிராவைப்பிடிக்கும் அளவுக்குப் பதவி உயர்ந்தது. சம்பளம் உயர்ந்தது.