பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 குழந்தை ராதையைப்பற்றி எண்ணினுள். கடந்து போன நாட்களெல்லாம் அவளுக்கு ஒரே இன்பக் கன வாகத்தான் பட்டின. ஐந்து மாசத்தில் தாயைப் பிரிந்த குழந்தையை உயிருக்கு உயிராக வளர்த்த கஷ்டங்கள் அவளுக்கு அல்லவா தெரியும்? எத்தனை இரவுகளைப் பகலாகக் கழித்திருக்கிருள், குழந்தையின் லூட்டி’ யிலும் ஆட்டத்திலும் பாட்டத்திலுமாக ஆளுல் இன் றெல்லாம் தன் வயிற்றில் பிறந்தது போல அம்மாஅம்மா என்று கிளிமொழியில் ராதை தன்ன அழைப்பது கண்டு, அவள் பெண் மனம் தாய் ஸ்தானத் தில் நின்று பெறும் ஆனந்த வெள்ளத்துக்குக் கங்குகரை ஏது? - - சுகுமாரர் மீளுவின் தாம்பத்தியம் ஆனந்த நாடக மாகத்தான் இருந்தது. அந்த நாடகத்தின் திரைமறை வில்தான் சாரதா, சுகுமாரரின் மூத்த மனைவி, சித்தப் பிரமையில் உழன்று கொண்டிருந்தாள், சோக நாடகத் தின் கதாநாயகியாக, சாரதாவை ஆஸ்பத்திரியில் சேர்த்த நாள்தொட்டுத் தினமும் ஸ்டுடியோ செல்லும் போதெல்லாம் சுகுமாரர் தம் முதல் மனைவியைப் பார்த்து வந்தார். மாதங்கள் பல கடந்தன. பலராலும் கைவிடப் பட்ட சாரதாவுக்கு வாழ்வ்ளிக்க முன்வந்தார் டாக்டர் சுதாகர். பல மணி நேரம் சோதனை நடத்தினர் கோமாளிப் பெண்ணை. படிப்பும் அநுபவமும், மேலே நாட்டு மனவல்லுநர் பிராய்ட்டின் சித்தாந்த சோதனை யும் டாக்டருக்கு மனத்தெம்பை ஊட்டின. சாரதாவின் மூளையை ஏதோ அதிர்ச்சி தாக்கவே, அதுதான் மூளைக் குழப்பமாக மாறி இப்படிப் புத்தி பேதலித்திருப்பதாகக் காரணம் காட்டினர் டாக்டர். வெகு விரைவிலேயே அவளைப் புனர்ஜன்மமெடுக்கச் செய்துவிடுவதாகவும் டாக்டர் வாக்களித்தார். பூரண குணம் அடைந்தது: