பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

星44 ' வரட்டுமா?’ என்று அவன் போய் விட்டான். கோவிந்தன் பெருமூச்சு விட்டான். சன்னுசியைத் தீர்த்தே விடுவது என்று அவன் நினைத்தது உண்மை. ஆனல் புண்ணில் கத்தி பட்டபோது எழும்பிய குரல், கோபத்தால் மறைக்கப்பட்டிருந்த மனிதத் தன்மை யைத் தொட்டுவிட்டதே! ஆத்திரம் தணிந்து, சோர்வுடன் அவன் போன திசையையே பார்த்தவாறு நின்ருன் கோவிந்தன். திடீரென்று மச்சான்!... என் மச்சான்!” என்று கூவி அழைத்துக் கொண்டே ஓடி வந்து கோவிந்தனின் பாதங்களிலே நெடுஞ்சாண் கிடையாக விழுந்தாள் பூாவயி! - அவன் பாதங்கள் நனைந்தன. அவளைத் தொட்டுத் தூக்க முனைந்தவன் தயங்கினன். 'மச்சான், நான் எப்பவும் ஒங்க சொத்துதான் மச்சான்! என் சத்தியத்தைக் காப்பாத்திட்டேனுங்க!” என்று கதறினுள். "பூவாயி: நீ.உன்ன...அந்தச் சன்னசி...” திண றினன் கோவிந்தன். நான் எங்க அம்மாயி வீட்டிலே இருக்கையிலே வந்து, நைச்சியம் பாடி என்னைக் கடத்திக்கிட்டுப் போயிட்டான். அந்தப் பாவி என் கையைப் பிடிச்சது - தான் தாமதம். அந்த நொடி அந்த ஆம்பளையோட மூஞ்சியிலே-இடது பக்கத்துக் கன்னத்திலே பல்லுப் பதியற மாதிரி ஒரு கடி கடிச்சேன். பாரு புத்தி!