பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அருள்முறைத் திரட்டு

85


எங்கும் வியாபகமான. நான்காமடியில் ‘இவை இலை’ ஞானானந்தத்து இருத்தலே ஆம் என இயைத்துப் பொருள் கொள்க. இவை என்றது ஆகு பெயராய் இவற்றால் விளையும் துன்பங்களை யுணர்த்தியது.

நல்குரவு - வறுமை

நுகரப்படுவன யாவும் இல்லாமை.

46. பொய்க்குழி தூர்ப்பான் புலரி புலருதென்
றக்குழி தூர்க்கும் அரும்பண்டந் தேடுவீர்
எக்குழி தூர்த்தும் இறைவனை யேத்துமின்
அக்குழி தூரும் அழுக்கற்ற போதே. (210)

அறஞ்சாரா நல்குரவினை நீக்குதற்கு ஓர் உபாயம் கூறுகின்றது.

(இ~ள்) பொழுது விடிகின்றது என்று சொல்லிக் கொண்டு விடியற்காலந் தொடங்கியே ஒரு நாளும் நிரம்பாத வயிற்றுக்குழியினை நிரப்புதற்பொருட்டு (அக்குழியினை நிரப்புதற்குரிய) அரிய பண்டங்களைத் தேடுகின்ற மக்களே! நும்முடைய உழைப்பினால் எத்தகைய குழிகளை நிரப்பியாவது எங்கும் நீக்கமறத் தங்கிய முதல்வனை (நுமது விழைவு அறிவு செயல்களுக்கு முதலாகக் கொண்டு) போற்றி வழிபடுமின் அவ்வழிபாட்டினால் உங்களுடைய உள்ளத்தின் மாசுகளாகிய அழுக்குகள் அறவே நீங்கிய நிலையில் (உங்களுள்ளத்தே கிளர்ந்தெழுந்த நல்லுணர்வின் பயனாகத்) தூராத அவ்வயிற்றுக் குழியும் எளிதில் தூர்ந்து விடும் எ-று.

வயிறாகிய குழி ஏனைக் குழிகள் போலப் பண்டங்களைக் கொண்டு ஒரே நேரத்தில் தூர்த்தற்குரிய பள்ளமுடைய குழியாகத் தோற்றாமல் மேடாகத் தோன்றிக் காலந்-