பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 திருமந்திரம்

காலத்தை எதிர்பார்த்து (அவருடன்) இருந்து உண்பீராக. ஈட்டிய பொருளே (யார்க்கும் பயன்படாமற் பழையன வாகக் கழியுமாறு இறுகச் சேர்த்து வைக்காதீர்கள் . காக்கை தன்னினத்தை அழைத்து உடனுண்ணும் செவ்வியை அறிந்து ஒழுகுவீராக.

வறியோராயின் அன்னேர் எத்தகையராயினும் அவர் தம் குல முதலிய வேற்றுமை கருதாது பொருள் தந்து பாதுகாத்தற் குரியராவர் என்பார், ஆர்க்கும் இடுமின் அவர் இவர் என்னன் மின் என்ருர், தன்கண்வந்த விருந்தினரை யுயசரித்து இனி வருதற்குரிய விருந்தினரை எதிர்பார்த்து வரவேற்று அவரோடு உடன் உண்டு மகிழ்தல் இல்வாழ்வார்க்குரிய கடமையாம் என்பார் பார்த்திருந்து உண்மின் என்ருர்.

  • செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்

நல்விருந்து வானத்தவர்க்கு? (86) என்னும் திருக்குறள் இங்கு ஒப்புநோக்குதற் குரியதாகும். ஈட்டிய (சமைத்த) பொருள் பழையதாய்த் தன் ஆற்றலற்று முடங்க அதனைத் தானும் நுகராது பிறர்க்கும் வழங்காது இறுகச் சேர்த்து வைத்தல் அறமாகாது என்பார் பழம் பொருள் போற்றன்மின் என்ருர் .

இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு: என்னும் மெய்ம்மைய்ை யுணராது உணவின்கண் பெரு விருப்புடையராய் விருந்தினரோடன்றித் தனித்து விரைந் துண்ணப் புகுதல் தவறென்பார் வேட்கையுடையீர் விரைந்து ஒல்லையுண்ணன் மின் என்ருர், காக்கை தான் உண்ணப் புகுங்கால் தன் இனத்தையெல்லாம் அழைத்து உண்ணுதல் போலச் சுற்றமும் விருந்தும் சூழவிருந்து உடனுண்ணலே இல்வாழ்வாராற் செய்யத்தக்கது என்பார்