பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 திருமந்திரம்

அறஞ்செய்யான் திறம்

அறஞ் செய்யா தார் இயல்புணர்த்துகின்றது.

61. இன்பம் இடரென் றிரண்டுற வைத்தது

முன் பவர் செய்கையினலே முடிந்தது இன்ப மதுகண்டும் ஈகிலாப் பேதைகள் அன்பிலார் சிந்தை அறம் அறியாரே. (267)

அறத்தான் வருவதே இன்பமென்பதுணர்ந்து அறஞ்

செய்யாதார் அறிவிலர் என்கின்றது.

(இ - ள்) மக்கள் வாழ்க்கையில் இன்பம் துன்பம் என இருவகை நுகர்ச்சிகள் பொருந்த இறைவன்) வகுத்த நியதி முற் பிறவிகளில் அன்னேர் செய்த நல்வினே தீவினை களாலே வரையறுக்கப்பட்டு முடிந்ததாகும். தம்பாலுள்ள பொருளே வறியோர்க்கு வழங்கி மகிழ்தலாகிய அவ்வின் பத்தினை நல்லோர்பாற் கண்டிருந்தும் தம்பாலுள்ள தனே வறியோர்க்கு ஈயமாட்டாத அறிவிலிகள் உயிர்ப்பண் பாகிய அன்பிலராவர். எனவே அதன் பயனுய் மாசற்ற வுள்ளத்தின் நிலேபெற்ற அறத்தினேயும் அறியமாட்டா ராயினர் எ-று.

உயிர்கள் பால் அன்புடைமையே இல்வாழ்க்கையின் பண்பாகவும் அன்பின் காரணமாகத் தம்பால் வந்த வறி யார்க்கு வழங்கிப் பகுத்துண்டு வாழ்தலாகிய அறமே வாழ்க்கையின் பயனுகவும் அமைந்த திறத்தை உள்ள வா றறிந்தாராயின் அன்பில்ை அறஞ்செய்து இன்புறுந் திறத்தைப் பெற்றிருப்பர் என் பார்,

'இன்பம் அதுகண்டும் ஈகிலாப் பேதைகள்

அன்பிலார் சிந்தை அறம் அறியாரே?

என்ருர்,