பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A 12 திருமந்திரம்

ஆர்வமும் அதற்குக் காரணமாகிய அன்புமுடையார் அடையும் பயனும் அஃதிலாதார் எய்தும் இழிவும் உணர்த்துகின்றது.

(இ-ள்) அன்பின் மிகுதியாகிய ஆர்வத்தையுடைய உருகுமணத்தின் அடியார்கள் பிறவி வேரறுக்கும் இறை வனேக் கண்டு இன்புறுவர். எவ்வுயிர்க்கும் பரிவாகிய அன்புடையவர்கள் எவ்விடத்தும் இறைவன் திருவடி யினே க் கண்டு மகிழ்வார்கள். அன் பென்னும் பண்பின்றி உலகப்பற்ருகிய சுமையினே யுடையவர்கள் அடுத்தடுத் துளவாம் பிறவியையே பெற்று அல்லற்படுவர். அன்பி லாதார கிய அவர்கள் அஞ்சத்தக்க நெறியினைப் பின் பற்றிக் கொங்கு நாட்டினிற் புகுவோரைப் போன்று மீளாத் துன்பத்தில் அகப்பட்டோராவர் எ - று.

'அன்பீனும் ஆர்வமுடைமை யது வினும்

நண்பென்னும் நாடாச் சிறுப்பு?

என் ருர் தெய்வப் புலவரும். தொடர்புடையாரிடத்துச் செய்த அன்பு அத்தன்மையாற் பிறரிடத்தும் விருப்ப முடைமையைத் தோற்றுவிக்கும். அவ்விருப்பமுடைமை யாகிய ஆர்வம் யாவரும் நண்பர் என்று கருதும் அள விறந்த சிறப்பினைத் தருவதாகும்? என்பது இதன் பொரு ளாகும். தொடர்புடைய உயிர்களிடத்து அன்புடையார் அவ்வுயிர்களிடத்து இறைவனுடைய ஞானசத்தி கிரியா சத்தியாகிய திருவடிகளைக் கண்டு பயன் பெறுவர் என் பார், "ஈரமுடையவர் காண் பார் இணையடி என்ருர், ஈரம்அன்பு. அன்பின் வளர்ச்சியாகிய ஆர்வத்தினைப் பெற்ற வர்கள் பகையும் நொதுமலும் இல்லேயாய் யாவரும் நண்பு என்று கொண்டு எவ்வுயிர்களையும் சிவனெவே காணும் தெளிவுடையராவர் என்பார், ஆர்வமுடையவர் காண் பார் அரன்றன்னே? என்ருர். பார்பதம் அண்டமனைத்து